பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லீம்கள் ஆக்கிரமித்தது குறித்து அளவுக்கதிகமான முக்கியத் துவம் தரப்படுகிறது. அலையலையான முஸ்லீம் படையெடுப்பு ஒரு பனிப்பாறைபோல வந்து மக்களை ஆட்கொண்டு, ஆட்சியாளர்களைத் தூக்கியெறிந்தது பற்றி கத்தைக்கத்தையாக எழுதப்பட்டிருக்கிறது. முஸ்லீம் படையெடுப்புதான் இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரே அம்சம் என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தாலும்கூட முஸ்லீம் படையெடுப்பு மட்டுமே ஆய்வுக் குரிய ஒரே படையெடுப்பல்ல. அதற்கிணையாக மற்ற படையெடுப்புகளும் இருக்கின்றன. முஸ்லீம் படையெடுப் புகளால் இந்து இந்தியா ஆக்கிரமிக்கப்பட்டதென்றால், அதேபோல் பார்ப்பன படையெடுப்பாளர்களால் பெளத்த இந்தியா படையெடுக்கப்பட்டது. . இந்து இந்தியாவின்மீதான முஸ்லீம் படையெடுப்பு வரலாற்று ஆய்வாளர்களுக்கு எவ்வளவு அக்கறைக்குள்ளாகிறதோ அதே அளவிற்கு பெளத்த இந்தியாவின் மீதான பார்ப்பனிய படையெடுப்புகளும் ஆய்வுக்கு உரியவைகளே...... முஸ்லீம்கள் இந்து மதத்தை வேருடன் பிடுங்கி எறியவில்லை. மக்களின் ஆன்மீக வாழ்க்கையை வழிநடத்தி வந்த கொள்கைகளுக்கு எந்த ஊறும் விளைவிக்கவில்லை. ஆனால் பெளத்தம் பரப்பிவந்த ஆன்மீக வாழ்வின் கொள்கைகள்மீதும், அவற்றை வாழ்க்கை முறையாக பின்பற்றி வந்த மக்களின் மீதும் பார்ப்பனிய ஆக்கிரமிப் பாளர்கள் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்’ என்ற அம்பேத்கரின் கூற்று அயோத்திதாஸரின் அணுகு முறையோடு முற்றிலும் பொருந்திவருவதைக் காணலாம். முஸ்லீம் ஆக்கிரமிப்பிற்கு முந்தைய இந்திய வரலாறு என்பது பார்ப்பனியத்திற்கும், பெளத்தத்திற்கும் இடையிலான ஜீவமரணப் போராட்டத்தின் வரலாறு ஆகும். இந்த உண்மை யை ஏற்றுக்கொள்ளாத எவராலும் உண்மையான இந்திய வரலாற்றை எழுத முடியாது என அம்பேத்கர் கூறுவதும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும். இந்த ஜீவமரணப் போராட்டத்தில் சதியால், வஞ்சகத்தால் வென்ற பார்ப்பனர்கள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தீமைகளை ஏழு பிரிவுகளாகக் குறிக்கின்றார் அம்பேத்கர்: