பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 க. அயோத்திதாஸப் பண்டிதர் எங்கள் வாக்கையே தெய்வவாக்காகவும், எங்களையே தெய்வ மாகத்தொழுது எக்காலமும் எங்கள் பெண்டு பிள்ளைகளுக்கு தானமளித்து வருவீர்களாயின் பிறவியின் துக்கமற்று முத்திப் பெறுவீர்கள். எனப் பிறவியின் பேதாபேதங்களும் அவரவர்கள் கன்மத்திற்குத் தக்கவாறு நிகழும். பிறவியினது தோற்றங்களு மிவ்வேஷ ப் பிராமணர்களுக்கு விளங்காவிடினும் பிறவி யென்னும் வார்த்தையைக் கொண்டே கல்வியற்றக் குடிகளை வஞ்சித்தும் பயமுறுத்தியும் பொருள் ச்ம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள். இத்தகையப் பொய்க்குருக்களின் செயலால் நாளுக்கு நாள் விவேக விருத்தியற்று அவிவேக மிகுத்துக் குடிகள் சீரழிந்து வரவும் வேஷப்பிராமணர்கள் விருத்தியுற்ருேங்கவு முள்ளதன்றி வீடுகடோருங் கூழாங்கற்களைக் கும்பிட்டுக் கெடும் யேதுக் களையுஞ் செய்துவிட்டார்கள். அதாவது வேஷப்பிராமணர்களே அடுத்த வரசர்கள் மடிந்தபோது அவர்களைப்போன்ற கற்சிலைகளமைத்து அவர்களைத் தொழுதுவரும் சிலாலயங்களை யமைத்துவருவது போதாமல் வீடுகடோருங் கூழாங்கற்களைத் தொழும் வகையை யெவ்வகையாய்ச் செய்துவிட்டார்களென்னில்; வியாரங்களில் தங்கியுள்ள அறஹத்துக்களை நாடிச்சென்ற வுபாசகர்கள் அவர்களை வணங்கியவுடன் திராவிட பாஷையில் “அறிவு பெருகுக வென்றும், மகடபாஷையில் “சாலக்கிரம” மென்றும் ஆசீர்வதிப்ப தியல்பாம். சாலக்கிரமமென்னு மொழியின் பொருள் யாதெனனில் எக்காலும் நீதி வழுவா நெறியில் நில்லுங்கோளென்பதேயாம். இம்மொழியை யதார்த்த பிராமணர்களிடங் கேட்டிருந்தக் கல்வியற்றக் குடிகள் இவ்வேஷப்பிராமணர்களை யடுத்து சாலக்கிரமங் கூறுவீர்களே இதை யேன் கூறுகிறதில்லையென்று கேட்பார்களாயின் அம்மொழியின் சப்தமும் அதன் பொருளும் அறியாதவர்களா யிருப்பினும் மிக்க வறிந்தவர்போல் அபிநயத்து வந்தவர்கள் ஆற்றங்கரைக்குச் சென்று அவ்விடந்தேய்ந்து பளப்பளப்புற்று சிவந்த கோடுகள் பரந்துள்ள சிறிய குழாங்கற்களை யெடுத்து வந்து மிக்க பதனமாக புஷ்ப்பத்திற் சுருட்டி கல்வியற்றக்