பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 85 குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் மடுத்து இதோ பார்த்தீர்களா இதற்குதான் சாலக்கிரமமென்று கூறுவது. இதனை வீடுகளில் வைத்து பூசிப்பீர்களானல் நீங்களெண்ணும் பொருட் களெல்லாம் உங்களுக்குக் கிடைப்பதுடன் கோறியவண்ணம் முடியும். சுகசம்பத்தாக வாழ்விர்கள். இதற்கு மதிப்பு:சொல்ல ஒருவராலு மியலாது. எவ்வளவு திரவியத்தைக் கொட்டினுங் கிட்டாது. சாலக்கிரமங்களில் இது விசேஷித்த சாலக்கிரமமெனக் கூறி பொருள்பரித்து தின்பதற்கு சாலக்கிரமமென்னும் வாழ்த்தல் மொழியும் சீவனத்திற்கோர் வழியாகிவிட்டது. கிருமங்கடோரும் சிலாலயங்களை வைத்து பூசிப்பது போதாது வீடுகடோருங் குழாங்கற்களை வைத்துப் பூசிக்கும் ஏதுக்களே செய்துவிட்டு வீடு கடோருஞ் சென்று பொருள் பரிக்குமோ ரேதுவையும் உண்டு செய்துக் கொண்டார்கள். “சாலக்கிரமம்” எக்காலுங் கிரமமான வாழ்க்கைப் பெற்றிருங் கோளென்னும் வாழ்த்தல் மொழி கூழாங்கல்லாகி விட்டதென்ற வுடன் சபா மண்டபத்திலிருந்த புருசிகர்கள் யாவரும் திடுக்கிட்டெழுந்து போய்விட்டார்கள். அஸ்வகோஷா நந்தனென்னும் அரசனை நோக்கி அரசே இந்த வேஷ ப் பிராமணர்களாம் பொய்க்குருக்கள் தங்கள் பத்துபேர் சீவனத்திற்காக நுாறு குடிகளழிந்தாலும் அவர்க ளுக்கு சீவகாருண்யங் கிடையாது தங்கள் பத்துபெயர் சீவனத் திற்கு பத்தாயிரம் பொன் விலைப்பெற்ற வியாரங்களழிந்தாலும் அவர்களுக்கு தாட்சண்யங் கிடையாது. தங்கள் பத்துபேர் சீவனத்திற்காக பதினையாயிரம் பொன் விலைப்பெற்ற சாஸ்திரங்க ளழியினும் அவர்களுக்கு ஞானமிராது. இத்தகைய ஞானமற்றவர்களும், நாணமற்றவர்களும், ஒழுக்கமற்றவர்களுமாகிய விக்கூட்டத்தோரென்று சொல்லுங் கால் வெளியிற் சென்ற புருசிகர்கள் யாவரும் வந்து சபையி லுட்கார்ந்தார்கள். அஸ்வகோஷா அவர்களை சுட்டிக்காட்டி தங்களுடைய நாட்டி ற்கு வடமேற்கே புருசிக நாடென்னு மொன்றுண்டு. அவ்விடத்தியப்பெண்கள் சூதககாலங்களில் ஏழுநாள்வரை வெளியிற்கிடப் பார்கள். துடையினின்று கால்தெரியாது செட்டைய2ணந்திருப்பார்கள். புருஷர்களும் சிரசில் நீண்ட குல்லாசாற்றி பெரும் வேட்டி சுற்றிக்