பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 Ꮾ க. அயோத்திதாஸப் பண்டிதர் கொள்ளுவார்கள். அக்கினியை தெய்வமாகத் தொழுவார்கள். அக்கூட்டத்தோர்களே யிவர்களாயினும் அப்பெண்கள் இவ்விடம் கால்செட்டை யனையாமல் இவ்விடத்திய சே2லயைக்கொண்டே கீழ்ப்பாட்சிக் கட்டி க்கொள்ளு கின்ருர்கள். அவ்விடம் அக்கினியைத் தொழுதபோதினும் இவ்விடம் அக்கினிகுண்டத்தைக் கையுடன் கொண்டு வந்திருக்கின்ருர்கள். அக்கினியைத் தொழுதுவருஞ் செயலால் சீவகாருண்ய மற்று உயிறுடன் ஆடு மாடு குதிரை முதலியவைகளை அக்கினியிலிட்டு ச் சுட்டுத்தின் பதுடன் புருஷ னற்ற விதவைகளையும் அவ்வக்கினியிற்போட்டுக் கொன்று வருகின்ருர்கள். காரணங் கேட்போமாயின் அவள் விதவையாகிவிட்ட படி யால் அக்கினியாய தேவனிடம் ஒப்படைத்து விட்டோமென்று கூறுவதுடன் அக்கினி யவியாதிருக்குமாறு சகல சுகதுக்க காரியாதிகளிலும் அக்கினியை வளர்த்துக் கொண்டே வருகின் ருர்களென்று சொல்லி வரும்போது அரசன் திடுக்கிட்டெழுந்து அஸ்வகோஷரை வணங்கி யோகேந்திரா இவர்கள் நம்முடைய தேசத்தாரன்று புருசிக தேசத்தோரென்பதும் சிலாலயங்களென்பதை சிவாலயங்க ளென்றதும் புலாலை யந்தரங்கத்தில் புசித்தலும், இஸ்திரீகளை அக்கினிக் கிரையாக்குதலு மாகியச் செயல்களை விளக்க வேண்டு மென்று வணங்கின்ை. அவற்றை வினவிய அஸ்வகோஷரசனை நோக்கி, நந்தா எனக்கு காலதாமத மாலுை மாகட்டும் நீர் கேட்குஞ் சங்கைகளை நிவர்த்திச் செய்யவேண்டியது முக்கியக் கடனுதலின் தெரிவிக்கின்ருே மென்று கூறி இப்பிராமண வேஷதாரிகள் நம்முடைய தேசத்தா ர ன்று புருசிக நாட்டா ரென் றறிந்துகொள்ள வேண்டு மா யின் உம்முடைய ஆசனத்திற்கும் வட மேற்குத் திக்கிலுள்ள புருசீக நாட்டி ற்கும் இருபத்தியேழுநாட் பிரயான மிருக்கின்றது. அவ்விடஞ்சென்று இவர்களுடைய தேக நிறங்களையும்; அவர்களுடைய தேக நிறங்களை யும் இவர்களுடைய குணக்குறிகளையும் அவர்களுடைய குனக் குறிகளையும்; இவர்களது கராபான புலால் பேருண்டி களையும்,