பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் யுண்டாய வதன் காரணகாரியங்களை சுருக்கத்தில் விளக்க வாரம்பித்தார். அரசே சகல உற்பத்திக்குக் காரணமும், சகலதோற்றத் திற்கு மூலமும், சகல மறைவுக்கு ஆதாரமுமாக ஏதுக்களுக்குத் தக்க நிகழ்ச்சிகளேயாம், அத்தகைய நிகழ்ச்சியில் வானம் பெய்து பூமியிற் புற்பூண்டுகள் தோன்றி, புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றி புழுக்கீடாதிகளினின்று ஊர்வனத் தவழ்வன தோன்றி ஊர்வனத்தவழ்வனத்தினின்று வானர விலங்காதிகள் தோன்றி பிறகு விலங்குகளினின்று நரர் மக்கள் தோன்றி, நரர் மக்களின்று புலன் தென்பட்ட தென்புலத்தார் தேவர் தோன்றி உலக சீர்திருத்தங்களைச் செய்து வருதலில் ஒவ்வொரு சீவராசிகளும் நாளுக்கு நாள் மேலுக்கு மேல் உயர்ந்து கொண்டே வருவதை யறியாது அவைகளைத் துன்பஞ் செய்வோரும் கொலைச்செய்தும் வருவதாயின் அவைகளின் மேன் நோக்கசுகங்களற்று மாளா துக்கத்தில் சுழல்வதன்றி அவைகளைத் துன்பஞ்செய்வோரும், கொலைச்செய்வோரும் மாளாப் பிறவியிற் சுழன்று தீராக்கவலையி லாழ்வரென்று பகவான் போதித்துள்ளபடி யால் அம்மொழிகளை சிரமேற் கொண்டு பெளத்த உபாசகர்கள் முன்னிலையில் இவ்வேஷப் பிராமணர்கள் ஆடுகளையும், மாடுகளையும் உயிருடன் நெருப்பில் கொன்றுத் தின்னுங் கொறுாரச் செயல்களைக்கண்டு இவர்களை மிலேச்சரென்றும், புலால் புசிக்கும் புலையரென்றுங் கூறி பெளத்த வுபாசகர்கள் சேர்ந்து வாழும் பகுதிக்குள் இவர்களை வரவிடாது சாணச்சட்டியையுடைத்து அடித்துத் துரத்துவது ஒர் விரோதமாகும். இரண்டாவது விரோதமோவென்னில், பெளத்த உபாசகர்கள் பகவனது போதனையின்படி இராகத்துவேஷ மோகங்களை மீறவிடாது மிதா காரம் புசித்து மா மிஷ பட்சணங்களை விலக்கியும், மதியை மயக்கும் சுராபானங்களை அகற்றியும் சுத்த சீலத்திலிருப்பவர்களாதலின் அவர்களது மத்தியில் இவ்வேஷப்பிராமணர்களாம் புருசீகர்கள் சுராபான மருந்தி மாமிஷங்களைப் புசித்து சுத்த சில மற்று நானா வொழுக்கத்தி லிருப்பது மன்றி சிற்றரசர்களையும் கனவான்களையும் அடுத்து இஸ்திரீகளும் புருஷர்களும்