பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 9 | பாழடைவார்களென்னும் பரிதாபத்தால் சிலையைக் காட்டி சீவனஞ் செய்துவரும் பொய்க்குருக்களையும் அவர்கள் போதனைக்குட்பட்டு பாழடைந்துவரும் பேதை மக்களையுங் கண்டித்துவரும் விரோதத்திற்கோ ரேதுவாயிற்று. காமியமுற்ற சிற்றரசர்கள் முன்னிலையிலும் மற்றுங் கல்வியற்றக்குடிகள் முன்னிலையிலும் ஆரியக்கூத்தாடி காரியத்தின் பேரிற் கண்ணுேக்க முடையவர்களாயுமுள்ள மிலேச்சர்களின் வெண்தேகமும் நாகரீகவுடையும் சகடபாஷா சுலோகங்களும் இத்தேசத்தோரை மயக்கி அவர்கள் சீவனே பாயத்திற்காகப் பொய்யைச்சொல்லி வஞ்சித்து பொருள் பரிக்கும் வழிகள் யாவையும் இத்தேசக் குடிகள் மெய்யென நம்பி மோசம் போய்விட்டார்கள். அவர்களுள் பெளத்த தன் ம போதகங்களும் அவைகளின் செயல்களும் வியாரங்களில் தங்கியுள்ள ஞான குருக்களாம் சமண முநிவர்களுக்கும், கன்மகுருக்களாம் சாக்கையர்களுக்கும் விளங்குமேயன்றி வேருெருவருக்கும் அதனந்தரார்த்தம் விளங்கவே மாட்டாது. அவ்வகை விளங்காக்குடிகள் யாவரும் இம்மிலேச்சர் களின் பொய்ப்போதகங்களுக் குட்பட்டு வருகின் ருர்கள். மற்றும் இவ்வாரியக்கூத்தரின் பொய்ப் போதகங்களையும் இம்மிலேச்சர்களின் பொய்ப் போதகங்களையும் இம்மிலேச்சர் களின் நாணு வொழுக்கங்களையும் விளக்கி அறிவுறுத்திவந்த பெளத்த சங்கத்தோர்களுக்கும் வேஷப் பிராமணர்களாம் பொய்க்குருக்களுக்கும் மாளா விரோதம் பெருகி புருசீகர்களைக் காணு மிடங்களிலெல்லாம் பெளத்தர்க ளடித்துத் துரத்தவும், பெளத்தர்களைக் கண்டவுடன் வோடுவதும் வழக்கமாயிருந்தது. பெளத்தர்கள் புருசீகர்களை அடித்துத் துரத்துவதும் அவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய் போதகங்களையும் விளக்கும்படியானவர்களா யிருக்கின்ருர்களன்றி புருசீகர்களைக் கெடுக்காமலும் மற்றுந் துன்பப்படுத்தாமலும் புத்திப்புகட்டி வருகின்ருர்கள். ஆரியர்களாம் மிலேச்சர்களோ, வென்னில் தங்கள் வசப்பட்டுள்ள சிற்றரசர்களைக்கொண்டு சமண முனிவர் களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கழுவிலுங் கற்கானங் களிலு மிட்டு வதைக்கத்தக்க யேதுக்களைத் தேடி அறப்