பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆள்வதும், அரசக் கொலையும் பார்ப்பனிய உரிமை யென்பதை நிலைநிறுத்தியது. d பார்ப்பனர்களை சிறப்புரிமைகொண்ட ஒரு வர்க்கமாக ஆக்கியது. 3. வர்ணத்தை சாதியாக மாற்றியது. 4. பல்வேறு சாதிகளிடையே மோதலையும், வெறுப் புணர்வையும் தோற்றுவித்தது. 5. சூத்திரர்களையும், பெண்களையும், இழிந்த நிலைக்குத் தள்ளியது. 6. படி நிலைகொண்ட சமத்துவ மற்ற (Graded linequality) அமைப்பை உருவாக்கியது. 7. மரபு ரீதியாக நெகிழ்ச்சி கொண்டதாயிருந்த சமூக அமைப்பை சட்டபூர்வமானதாகவும், இறுகியதாகவும் மாற்றியது. அம்பேத்கரின் இந்த முடிவுகளைத்தான் அயோத்திதாஸரின் ஆய்வும் நிறுவுகின்றது. பெரிய புராணத்தின் வழி அறியப்படும் நந்தனின் சரித்திரத்தை அயோத்திதாஸ்ர் வேறுவிதமாக சித்திரித்துக் காட்டு கிறார். நந்தன் ஒரு மன்னனென்றும், பெளத்த நெறிகளைப் பரப்பிவாழ்ந்த அவனைப் பார்ப்பனர்கள் வஞ்சகமாகக் கற்சிதம்பத்தில் வீழ்த்திக் கொலை செய்தார்களெ னவும் அயோத்திதாஸர் எடுத்துரைக்கின்றார். இது தற்காலத்திய ஆய்வாளர்கள் கவனம் கொள்ளத்தக்கதாகும். பெளத்தமார்க்கத்தை ஏற்றதில் மட்டு மின்றி வரலாற்றை அணுகும் விதத்திலும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடி யாகத் திகழ்ந்திருக்கிறார் அயோத்திதாஸ்ப் பண்டிதர். அம்பேத்கருக்குக் கிடைத்த அறிவுலக அறிமுகமோ அயல்நாட்டுத் தொடர்புகளோ, வாய்ப்புகளோ கிடைக்காத நிலையிலும்கூட அயோத்திதாஸர் இந்த அளவுக்கு வரலாற்றைப் பற்றிய அறிவும் அதை எழுதும் திறனும் பெற்றிருந்தது நம்மை வியக்க வைக்கிறது.