பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 9 7 கட்டி டங்களும் அதனுட் கற்சிலைகளு மமைக்கப்பெற்றிருப்பதை யறிந்த யாங்க ள திசய முற்று தங்களுக்குத் தெரிவிக்க வந்தோ மென்று கூறினர்கள். அவற்றைக்கேட்ட வரசன் திடுக்கிட்டு நம்முடைய தேசத்துள்ளும் சிலாலயங்க ளிருக்கின்றதாவென்று ஆச்சரியமுடையவனாய் வேவுகர்களை யழைத்து பரிக்கு சேன மிட்டு வரச்செய்து அதன் மீதேறி புருசிகர்களை யு மழைத்துக்கொண்டு காட்டிலுள்ள மண் மேட்டை யணுகி கல்லுகள் விழுந்துகிடக்கும் இடத்தி லிரங்கி சற்று நிதானித்து அரசனுகையாற் றுணிகரமுண்டாகி யருகிற்சென்று சூத்திரப்பாவையிற் கால்களை வைத்தவுடன் திடீலென்று கல்லுக்குக்கல் மோதவும், நந்தனது தலைக் கீழாகவும், கால்மேலாகவு நசிய சிதம்பித்துக் கொன்றுவிட்டது. உடனே வஞ்சநெஞ்ச மிலேச்சர்களாகிய வாரியர்கள் உளருக்குட் சென்று குடிகளெல்லோரையுங் கூவி பார்த்தீர்களா நந்தன் எவ்வளவு பக்தியுடை யவன யிருந்தான் சுவாமி அவன் மீது மிக்கப் பிரீதியுடை யவராகி விழுங்கிவிட்டார். பாதங்கள் மட்டிலும் தெரிகிறதென்று காண்பித்தவுடன் ஒவ்வொருவரும் பயந்து தூர விலகி நிற்குங்கால் அறப்பள்ளிகளாம் மடங்களிற் றங்கியிருந்த சமணமுநிவர்களும், மற்று முள்ளோரும் அவ்விடம் வோடிவந்து பார்த்து ஆ ஆ! இம் மிலேச்சர்களாகிய வாரியர் சிதம்பக்கல்லை நாட்டி நந்தனைக் கொன்று விட்டார்களென் றறிந்து துக்கிக்குங்கால், புருசீகர்கள் தந்தனை சுவாமி விழுங்கிவிட்டார் விழுங்கிவிட்டாரென்று கொண்டாடி குதிப்பதை யறிந்த வுபாசகர்களுக்குக் கோபமீண்டு பல வாரடித்து சிலரைக் கொன்றதுபோக மீதமுள்ளோர் தங்களு டையப் பொய் வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் மெய்யென நம்பி மோசம்போயுள்ள தஞ்சை வானேவென்னு மரசனையணுகி அவனிடம் பெரும் பொய்யைச் சொல்ல வாரம்பித்துக் கொண்டார்கள். அவை யாதெனில், அரசே யாங்கள் சில காலத்திற்கு முன்பு தங்களுடைய நாட்டிற்கு வடகிழக்கே அரசாண்டு வந்த நந்தனென்னு மரசனை யடுத்து அவருடைய பூமியிலுள்ள ஒர் மண்மேட்டை வெட்டும்போது பழய ஆலயமொன்று காணப்பட்டது. அவற்றை முற்றிலுஞ் சோதித்து அரசனிடஞ்