பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 99 யாவரையு மிவ்விடத் தருவித்துக்கொண்டு தந்தனைச் சிதம்பித்த விடத்தை ஆலயமெனக்கட்டி அதனைச் சுற்றிலுங் குடி யிருக்கத் தக்க வீடுகளைக் கட்டிக்கொண்டு அதன் புறம்பிலுள்ள பூமிகளைப் பண்படுத்திக் கோவிலைச் சார்ந்ததென்று ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பிராமண வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் விளங்கப் போதித்து அடித்துத் துரத்திவரும் பெளத்தர்களின் பயமில்லாமல் வாழலாம். அங்ங்ன மிராது அஜாக்ரதையி லிருந்து விடுவோமாயின் நம்முடைய வேஷத்தை சகலரு மறிந்துக்கொள்ளுவார்களென்று ஒருவருக்கொருவர் கலந்து தங்கள் சுற்றத்தோர்களில் பெருங் கூட்டத்தோர்களை அவ்விடம் வருவித்துக்கொண்டு இலட்சுமன ரெளவென்னும் அரசல்ை தங்களுக்கு வேண்டிய யில்லங்களைக் கட்டிக்கொண்டது மன்றி வேண்டிய பூமிகளையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கைககத்தி லிருந்தார்கள். அக்காலத்திற் றங்கள் பூமிகளை சீர்திருத்தி பயிர் செய்வதற்கு அரசனைச்சார்ந்த மாராஷ்டக பாஷைக்குடிகளைச் சேர்த்துக் கொண்டால் தங்களுக்கடங்கியேவல் செய்யமாட்டார் களென்று கருதி திராவிட பாஷையில் கல்வியற்றவர்களும், சீல மற்றவர்களுமாய் இல்லமின்றி காடே சஞ்சாரிகளாக மலையடிவாரங்களில் திரிந்திருக்கும் சிலக் குடிகளைக் கொண்டு வந்து தங்கள் பண்ணை வேலையி லமர்த்தி வேண்டிய யேவலை வாங்கிக்கொள்ளுவது மன்றி மற்றுமோர் பேரிழிவை யும் சுமத்திவிட்டார்கள். அவை யாதெனில், மராஷ்டக்குடிகள் உங்களை யாரென்று கேட்பார்களாகில் நாங்கள் பறையர்கள் பறையர்களென்று துணிந்து கூறுங்கள். அவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாமென்று கூறிய மிலேச்சர்களின் வார்த்தையை கல்வியற்றக் குடிகள் பேரிழி வென் றறியாமலும் இழிபெயரென் றுணராமலும் மராஷ்டக் குடி கள் நீங்கள் யாவரென்றுக் கேட்குங்கால் பறையர் பறையரென்றே பறைய வாரம்பித்துக்கொண்டார்கள். அதன் காரண மியாதெனில், பெளத்தர்களுக்குள் விவேகிகளும், வருங்கால போங்காலங்களை யறிந்துக் கொள்ளக்கூடிய மந்திரவாதிகளாைேர் மிலேச்சர்களாம் ஆரியர்களை அடித்துத் துரத்தி பெளத்தக்குடிகள் யாவருக்கு