பக்கம்:சகல கலாவல்லி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சகல கலாவல்வி

ஐயம். அவர் இந்தியைக் கற்கவேண்டுமென்று நினைத்தார். தண்ணிர்த் தாகம் அதிகமாக இருக்கும்போது, கிணறு வெட்டி அதிலிருந்து நீரை எடுத்துச் சாப்பிடுவது முடியாத காரியம். அப்படி, இனிமேல் இந்தியைக் கற்றுக்கொண்டு, அதில் பேசுவதற்குப் பழகி, அப்புறம் நவாபுடன் பேசுவது என்பது நடக்கிற காரியமா?

அப்போது முனிவர் எல்லாக் கலைகளுக்கும் நாயகியாகிய கலைமகளை எண்ணிஞர். சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடினர். பத்துப் பாடல்கரேயுடைய அந்த நூல் கலைமகளின் அருளை வேண்டும் துதியாக அமைந்திருந்தது. அவளது அருளால் இந்தியில் அவரால் நன்முகப் பேச முடிந்தது. நவாபுக்குச் சமமாக இந்தியில் பேச வல்லுநர் ஆஞர். இந்தி மொழியிலேயே நவாபுடன் பேசினர். சிங்கத் தின் மேல் அமர்ந்து வந்த ஆற்றலையும், இந்தியில் பேசிய சாமர்த்தியத்தையும் கண்டு நவாபு, 'உங்கள் விருப்பம் போல மடம் கட்டிக்கொள்ள இடம் தருகிறேன். எந்த இடத்தில் இடம் வேண்டும்?' என்று கேட்டார். 'எந்த இடத்தில் உபய கருடர்கள் வட்டமிடுகின்றனவோ அந்த இடத்தைத் தரவேண்டும்’ என்று சொன்னர். அங்கே கேதார கட்டத்தில் ஒரிடத்தில் உபய கருடன்கள் வட்ட மிட்டன. அந்த இடத்தை நவாபு குமரகுருபரருக்குத் தந்தார். அந்த இடத்தில் முனிவர் மடம் கட்டிக்கொண்டு வாழ்ந்தார். அங்கே புராணசால் என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு புராணங்களப் பற்றிய சொற்பொழிவு ஆற்றினர். அந்த மடம் இன்றைக்கும் கேதார கட்டத்தில் குமார சுவாமி pடம் என்ற பெயரோடு விளங்குகிறது.

நவாபுடன் பேசுவதற்கு வல்லமை பெறவேண்டுமென்று எண்ணிய முனிவர் பாடியது சகல கலாவ ல் லி காலே. கலைமகள் சிறப்பையும், தத்துவத்தையும் பற்றி அந்த நூல் மிக நன்முக விளக்குகிறது. இனி அந்த நூலின் பொருட் இறப்பைப் பார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/11&oldid=557842" இலிருந்து மீள்விக்கப்பட்டது