பக்கம்:சகல கலாவல்லி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& அகல கலாங்ல்:

இவற்றையெல்லாம் எண்ணியே கல்மகள் வெண்டா மரையில் வீற்றிருக்கிருள் என்று குறிப்பாக அமைத்தார்கள்.

வெள்& என்பதற்கு மாசுமறுவற்ற நிகில் என்பது ஒரு பொருள். ஒன்றுமில்லாத சூனியம் என்பதும் ஒரு பொருள். வெள்ளே அறிவு என்று சொன்னுல் அறிவு இன்மையைக் குறிக்கும். -

குமரகுருபரர் கலைமகளேப் பாடத் தொடங்குகிரும். எம்பெருமாட்டிய்ே, நீ வெள்ளைத் தாமரையில் வீற்றிருக் கிருய். அதோடு என் உள்ளத் தாமரையிலும் வீற்றிருக்கக் கூடாதா?’ என்று கேட்கிருர்,

வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்களன் வெள்ளை உள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொலோ ?

என்று பாடுகிருர். 'உன்னுடைய திருவடியைத் தாங்கு வதற்கு வெள்ளேத் தாமரைக்குப் பாக்கியம் கிடைத்தது போல என்னுடைய உள்ளமாகிய வெள்ளேத் தாமரைக்கும் கிடைக்கக் கூடாதா?’ என்கிருt.

இங்கே வெள்ளே உள்ளம் என்பதற்கு, அறிவு ஒன்றும் இல்லாத சூனிய உள்ளம் என்று பொருள் கொள்ள வேண்டும். தன்மை என்பதற்கு இழிவு என்று பொருள். தண்டாமரை இழிந்த தாமரை. "ஒ ன் றும் அறியாத சூனியம் ஆகிய இழிந்த தாமரையைப் போன்ற உள்ளத்தில் உன் பாதம் தங்காதா ? என் உள்ளத்தில் உன் திருவடி படாதா ? என் உள்ளத்தில் வந்து இருக்கக்கூடாதா?’ என்று வேண்டுகிருர், -

பிறகு கலைமகளின் பெருமையைச் சொல்கிருர். அதை அழகாக எடுத்துக் கூறுகிரு.ர். -

உலகத்தில் ஆக்கும் செயலைப் பிரமன் செய்கிருன். காக்கும் செயல்த் திருமால் ஏற்றிருக்கிருன். சங்காரம் செய்யும் தொழில் ருத்திரன் ஏற்றுக் கொண்டிருக்கிமூன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/15&oldid=557846" இலிருந்து மீள்விக்கப்பட்டது