பக்கம்:சகல கலாவல்லி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்டாமரையும் தண்டாமரையும் y

இந்த மூவர்களில் பிரமன் தேவியாக இருப்பவள் சகலகலா வல்லி. பிரமன் நாவில் அவள் குடிகொண்டிருக்கிருள், பிரமன் கலேவல்லாளன் என்பதையே அது காட்டும். பிரமன் சிருஷ்டி கர்த்தா உலகை அவன் புதிது புதிதாகப் படைத் துக்கொண்டே இருக்கிருன். படைப்பாற்றலுக்குக் கல் மகளின் திருவருள் வேண்டும்.

பிரமன் நாவில் இருக்கின்ற கலைமகளின் தன்மையைத் சொல்ல வருகிருர் நயமான ஒரு கற்பனேயை ஆளுகிரு.ர். ஏழு உலகங்களையும் காப்பாற்றுகிற திருமால் அதனே உண்கிருளும். எல்லாவற்றையும் தன் வயிற்றுள் அடக்கு வதை, உண்டான் என்று சொன்னர். அதிகமாகச் சாப்பிட்ட, வனுக்கு உறக்கம் வந்துவிடும். அதுபோல் உலகம் ஏழையும் உண்ட திருமால் நாகப்பாம்பில் படுத்து உறங்குகிருன்.

எல்லா உலகத்தையும் ச ங் கா ர ம் செய்கிறவன் ருத்திரன். அப்படிச் சங்காரம் செய்த பிறகு அவன் பித்தனேப் போலத் திரிகிருன். சங்கார மூர்த்தியாகிய சிவபெருமான் பித்தனப்போலக் கையில் கபாலம் எடுத்துக்கொண்டு பிச்சையேந்தித் திரிகிருன் ஏழு உலகத்தையும் காப்பவன் சுகமாக உண்டு உறங்குகிருன். உலகத்தை அழித்தவன் பித்துப்பிடித்து அலைகிருன். இனிமேல் உலகத்தைப் படைக்க வேண்டும். இந்த இரண்டு பேர்களுக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை.

பாதுகாப்பவன் குறட்டை விட்டுத் துரங்குகிருன். மற்ற வன் அழித்து விட்டு ஊரைச் சுற்றித் திரிகிருன் மறுபடியும் பிரபஞ்சத்தை உண்டாக்க வேண்டுமென்ற கவலே அவர் களுக்கு இல்லை. பிரமனுக்கு அந்தத் தல்ைச்சுமை இருக்கிறது. அவன் எல்லாவற்றையும் படைக்க வேண்டும். அப்படிப் படைக்கும்போது சலிப்பு ஏற்படும் அல்லவா? ஏதாவது புத்தகம் எழுதுகிறவர்கள் நடுநடுவே சிற்றுண்டியை உண்டு எழுதுவார்கள். சலிப்பைப் போக்கிக்கொள்ள நடுநடுவே காபி சாப்பிட்டுக்கொண்டு எழுதுவதும் ஆண்டு. இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/16&oldid=557847" இலிருந்து மீள்விக்கப்பட்டது