பக்கம்:சகல கலாவல்லி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பrடும் பணி # #

மனிதன் தன்னுடைய கருத்தை மற்ருெருவனுக்குத் தெரி விப்பதற்குத் தோன்றியதுதான் மொழி. ஆனல் அந்த அளவில் மொழி நின்றிருந்தால் அது வளம் பெற்றது ஆகாது. இலக்கியச் சிறப்புச் சேரச் சேர மொழி வளம் பெறுகிறது.

பிச்சைக்காரர்களில் இரண்டு வகை உண்டு, இராப் பிச்சைக்காரன், பகல் பிச்சைக்காரன் என்று. இந்த இரண்டு பிச்சைக்காரர்களில் பார் உயர்ந்தவர் என்று கேட்டால், அந்தக் கேள்வி பரிகாசமாகத் தோன்றும். ஆளுல் இரண்டு பேர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனித்தால் யார் உயர்ந்தவர் என்று ஒருவாறு தெரியும். >

இந்த நாட்டில் இராப்பிச்சைக்காரனுக்குத் தாய் மார்கள் சோறிடுவது வழக்கம். பகல் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுவார்கள். சோற்றை வாங்கும் பிச்சைக்காரன் அதை ஒரு வேளேக்கு உண்ணலாம்; மீதி இருந்தால் அடுத்தி நாள் பகல் ஒரு வேளைக்கு உண்ணலாம்; மூன்ருவது வேளைக் குப் பயன்படாது. பகல் பிச்சைக்காரன் அரிசி வாங்குகிருன். அந்த அரிசியை இரண்டு மூன்று நாட்களுக்குக்கூட வைத்துக் கொள்ளலாம். பல வே&ாக்குப் பயன்படும். எனவே அரிசி பெறுகிற பிச்சைக்காரன் சோற்றைப் பெறுகிற பிச்சைக் காரனேவிட உயர்ந்தவன். இப்படியே வாரந்தோறும் கூலி வாங்குகிறவன், தினந்தோறும் கூவி வாங்குகிறவனேவிட உயர்ந்தவன். மாதந்தோறும் கூலி வாங்குகிறவன், வாரத் தோறும் கூவி வாங்குகிறவனே விட உயர்ந்தவன். ஓர் ஆண்டுக்கு மொத்தமாக என்று பண்டங்களே வாங்கிச் சேமிக்கிறவன் மாதந்தோறும் சம்பளம் பெறுகிறவர்களை விட உயர்ந்தவன். எல்லோருக்கும் மேலான செல்வர் நிலக்கிழார். நிலத்தை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நெல் கிடைக்கும். அதிலிருந்து மாதந்தோறும் ஆரிசி பெறலாம்; வேண்டிய மற்றப் பொருள்களைப் பெறலாம். வேளேதோறும் சோறு சமைத்துச் சாப்பிடலாம். இவ்வுள ஆக்கும் மூலமாக நிலம் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/20&oldid=557851" இலிருந்து மீள்விக்கப்பட்டது