பக்கம்:சகல கலாவல்லி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 波器

பயன் உண்டாகிறது. நயனும் பயனும் உடையதாக இலக்கியம் அமைகிறது.

பழைய காலத்தில் இலக்கியங்கன் எல்லாம் கவிதை வடிவத்தில் இருந்தன. காகிதம் முதலிய வசதிகள் இல்லாத காரணத்தில்ை நெஞ்சம் என்னும் ஏட்டில் எழுதிக்கொள்வ தற்குச் சாதகமாகக் கவிதைகளைப் பயன்படுத்திஞர்கள். சோதிடம், மருத்துவம் முதலியவற்றைக் கூடச் செய்யுளாக எழுதி வைத்தார்கள். செய்யுளாக எழுதினல் மனப்பாடம் செய்ய வசதியாக இருக்கும். ஆகையால் எந்த நூலேயும் அந்தக் காலத்தில் செய்யுள் வடிவில் எழுதிமூர்கள்

ஆளுல் செய்யுள் வேறு: கவிதை வேறு. சுவை நிரம்பி அதே கவிதையாகும். அது படிக்கப் படிக்க இன்பம் தரும், ஒரு முறை படித்தால் வரும் இன்பம் டி. க் க ப் படி க் க மிகுதியாகிக்கொண்டு வரும்,

"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளன் தொடர்பு'

என்பது திருக்குறள். -

"ஆயுந் தொறும்தொறும் இன்பம் தருந்தமிழ்' என்பது ஒரு புலவர் வாக்கு.

கற்கண்டு சுவைக்கச் சுவைக்க இன்பம் தருவது போல, இலக்கியம் படிக்கப்படிக்க இன்பத்தை உண்டாக்கும். அந்த

இன்பத்தைத் தருவதற்குக் காரணம் என்ன ?

சுவையுள்ள பண்டமாகிய லாடு போன்றவை இனிக் கின்றன. அவற்றில் மா, நெய், சர்க்கரை போன்றவை சேர்ந்திருக்கின்றன. அவைகளே எல்லாம் வாங்கித் தின் பண்டம் செய்தால் சுவையாக இருக்கும். ஆளுல், கவிதை யிலே சொல், பொருள் ஆகிய இரண்.ே இருக்கின்றன. 'நாம் பேசுவதில் சொல்லும் உண்டு; பொருளும் உண்டு, ஆளுல் சுவையில்லை. நாம் அவற்றைச் சுவை தரும்படியான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/22&oldid=557853" இலிருந்து மீள்விக்கப்பட்டது