பக்கம்:சகல கலாவல்லி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tiாடும் பணி 1 s

யாகப் பணத்தைச் சேர்த்தான்! காசா லேசா ?' என்ருன். மற்றவளுே, ""வயிற்றுக்குக் கூடச் சாப்பிடாமல் காசைச் சேர்த்தான். இப்போது உயிரே போய்விட்டது. காசாலே, சா' என்ருன். காசாலேசா என்ற நான்கு எழுத்துக்களையே இருவர் பேச்சிலும் பார்க்கிருேம். இந்த நான்கு எழுத்துக்கள் ஒன்று சேரும்போது காசா என்று சொல்லி நிறுத்திப் பிறகு லேசா என்று சொன்னுல் பாராட்டும் பொருள் கிடைக் கிறது. ஆளுல் காசாலே என்று சொல்வி நிறுத்திப் பிறகு சா என்ருல் இழிவு தொனிக்கிறது. நாலு எழுத்துக்களே ஆளுலும் இருவேறு வகையில் வார்த்தைகளேப் பிரித்துச் சொல்லும்போது நேர்மாருன இரண்டு பொருள்கள் கிடைக்கின்றன. இதைச் சிலேடை என்று சொல்வார்கள். இதே வார்த்தைகளுக்குப் பணம் என்பது போன்ற வேறு சொற்கக்ளப் போட்டால் இந்த இன்பம் வராது. வேறு மொழியில் மொழி பெயர்த்தாலும் வராது. இத்தகையவை சொல் இன்பம் தருவன.

பொருட்சுவை என்பது பொருளாலே உண்டாகிற இன்பம். வெறும் கருத்து மட்டுமன்றி, கருத்துக்களேசி சொல்கிற முறையிலும் இன்பம் உண்டாகும். சொற்கவை உணவுக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்றது: பொருட்கவை சோறு போன்றது. ஊறுகாய் சிறிதளவே இருக்கவேண்டும். சோற்றுக்குப் பதிலாக ஊறுகாயையே உட்கொண்டால் வயிற்றுக்கடுப்பு நோய் வரும். சிலே.ை முதலியவற்றைக் கொண்டு மாத்திரம் கவிதை பாடி குல் அது சிறந்த கவிதையாகாது. அங்கங்கே சிறிது இருக்கலாம். கம்பராமாயணத்தில் அ ப் படி ச் சில இடங்களில் சொற்சுவை உள்ள பாடல்களைக் காண லாம். பெரும்பாலும் பொருட் சுவை மிகுந்தனவே உள்ளன. -

பொருட்சுவை ஒன்பது வகை. அந்த ஒன்பது சுவை களும் நம் உள்ளத்திற்கு இன்பத்தைத் தருவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/24&oldid=557855" இலிருந்து மீள்விக்கப்பட்டது