பக்கம்:சகல கலாவல்லி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫 - சகல கலாவல்லி

சொற்கள் உண்டு. உள்ளதை உள்ளபடியே சொல்வது "ரியாலிடி'; உள்ளது போலத் தோற்றும்படி சொல்வது ரியாலிஸம்" உள்ளதுபோலத் தோற்றும்படி சுவை கமழும் படி சொல்வதற்கு உள்ளமும் அதில் உணர்வும் வேண்டும். வெறும் அறிவு இருந்தால் போதாது. நன்னூலார்.

உணர்வினில் வல்லோர் அணி பெறச் செய்வது செய்யுள்'

என்று கவிதைக்கு இலக்கணம் வகுக்கிருர், உணர்வினில் வல்லவர்கள் இன்னதைச் சொல்ல வேண்டும், இன்னதைச் சொல்லக் கூடாது என்று தெள்ளித் தெளிப்பார்கள்.

ஒரு பாறையை நாம் பார்க்கிருேம். அதில் எந்த அழகை : யும் நாம் பார்ப்பதில்லை. ஆளுல் ஒரு சிற்பி அதைப் பார்க் கிருன்; அந்தப் பாறையில் ஒர் அழகிய மங்கையின் வடிவத்தைப் பார்க்கிருன்; அந்த மங்கை பாறைக்குள் ஒளிந்திருக்கிருள். சிற்பக் கலைஞன் அந்தப் பாவையை நமக்குக் காட்ட முனைகிருன். பாவையல்லாத கற்பகுதிகளைச் செதுக்கித் தள்ளுகிருள். திரைக்குள் இருக்கும் உற்சவ மூர்த்தியைத் திரை போட்டிருக்கும்போது நாம் பார்க்க முடியாது; திரைதான் தெரியும். ஆளுல் அர்ச்சகர் திரையை விலக்கி விட்டால் மூர்த்தியின் அழகை நாம் காண்கிருேம். திரை கடவுளே மறைத்திருந்தது. அதை ஒதுக்கியதால் கடவுளே நாம் காண முடிகிறது. அதுபோலவே பாறையில் ஒரு கல்திரை மங்கையின் வடிவத்தை மறைத்திருக்கிறது. அர்ச்சகர் திரையை ஒதுக்குவதுபோல, சிற்பி கல் திரையைச் செதுக்குகிருன். செதுக்கிய பிறகு நமக்கு மங்கையின் வடிவழகு தெரிகிறது. -

பிரபஞ்சத்தில் நாம் காணும் பொருள்களே ஒரு வகை யான திரை மூடிக்கொண்டிருக்கிறது. அழகை அழகில்லாத பகுதிகள் மறைத்து நிற்கின்றன. கவிஞன் அவற்றைச் சலித்துப் பார்த்து தெள்ளித் தெளித்து, அழகிய பகுதிகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/33&oldid=557864" இலிருந்து மீள்விக்கப்பட்டது