பக்கம்:சகல கலாவல்லி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

氯 அதில் இலாவல்வி

'உள்ளத்தால் உண்ணப் படும்தேனே'

என்று தமிழ்க் கவிதையைத் தமிழ்விடு தரது பாடியவர் சொல்கிரு.ர். -- .

இப்படிக் கவிதை மழை பொழியும் மேகங்களாகிய கவிஞர்களுக்கு அருள் பாலிக்கிறவள் சகலகலாவல்லியே. அவளிடம் குமரகுருபரர் ஒரு விண்ணப்பம் செய்து கொள் கிமுர். "நீ கருனே கூர்ந்து வழங்கும் செழுந்தமிழாகிய அமிழ்தத்தை நான் மாந்த வேண்டும். உன் அருளாகிய கடலில் குள்ளக்குளிரக் குளித்து மகிழவேண்டும்" என்கிருt.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்து உன்

அருட்கடலில் - குளிக்கும் படிக்கு என்று கூடுங்கொலோ ?

என்று ஏங்குகிரு.ர்.

நாமும் தமிழில் பேசுகிருேம். மற்ற மொழி பேசுகிறவர் களிடம், "நாங்கள் தமிழர்கள்' என்று சொல்விக்கொள் கிருேம். நம்முடைய கருத்தை வெளிப்படுத்த ஒரு கருவி யாகத் தமிழ் மொழியை ஆள்கிருேம். இது வெறுத்தமிழ்: இதில் வளப்பம் இல்லை. கவிஞர்கள் தரும் தமிழோ சுவை மிக்க தமிழ் ; மொழியின் வளமாகிய சொல்லின்பம் பொருளின் பங்களையுடைய தமிழ். அந்த வளமே செழுமை. அவர்கள் தமிழ் செழுந்தமிழ். நாம் பேசும் தமிழை, தாமும் மறந்து போகிருேம்; கேட்கிறவர்களும் மறந்து போகிருர் கள். ஆனல் கவிஞர்களின் தமிழோ பல காலம் நின்று நயம் தரும் செழுந்தமிழாக இருக்கிறது.

அது மாத்திரம் அன்று. அந்தச் செழுந்தமிழைத் தெள்ளமுது என்று சொல்கிருர் குமரகுருபர முனிவர். சுவையுள்ள பொருள்களில் எல்லாவற்றையும் விஞ்சி நிற்பது அமுது. எந்தப் பொறிக்கு இன்பம் தரும் பொருளாக இருந் தாலும் அதை அமுதம் என்று உவமை காட்டிச் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/35&oldid=557866" இலிருந்து மீள்விக்கப்பட்டது