பக்கம்:சகல கலாவல்லி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கவியும் 酶雄

இவ்வாறு பண்டைப் பழங்கால முதல் நிலவிப் பயன் தந்து வருபவை வடமொழியும் தென்மொழியும். இந்த இரண்டையும் மதித்துப் போற்றுகிறவர் குமரகுருபரர்.

மீனுட்சியம்மையைப் பாடும்போது,

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்

தொடையின் பயனே ! நதையழுத்த

துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்

சுவையே t' "

என்று போற்றுவார். முத்துக் குமரனே முத்தம் தா என்று வேண்டும் போது அவன் , திருவாயைச் சிறப்பிக்கின்ருர்; அந்தக் கனிவாயில் வடமொழியில் உள்ள மறையும் இனிய தமிழும் மனக்கின்றனவாம்.

'கலேப்பால் நிறைந்த முதுக்குறைவிற்

கல்விச் செல்வர் கேள்விநலம் கணியக் கணிய அமுது தும்

கடவுள் மறையும், முதற்சங்கத்

தலைப்பா வர்ைதீஞ் சுவைக்கனியும்

தண்தேன் நறையும் வடித்தெடுத்த சாரம் கனிந்துாற் றிருந்தபசும்

தமிழும் நாற'

என்று பாடுகிருர். மதுரைப் பெருமாளுகிய சோமசுந்தரக் கடவுளே,

பொழிந்தொழுகு முதுமறையின்

சவைகண்டும் புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழின்

மழலைசெவி மடுத்தனையே’

என்று பாராட்டுகிறர். கமைகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/40&oldid=557871" இலிருந்து மீள்விக்கப்பட்டது