பக்கம்:சகல கலாவல்லி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல் சகல கலாவல்லி

பல நூல்களை அறிவதற்குக் கலைமகள் அருள்வேண்டும். பழைய காலத்தில் புலவர்களை, நூலறி புலவர் என்று போற்றுவார்கள். நூல்களே அறிந்து உணர்வதோடு தாமே நூல் படைக்கும் புலவர்கள் அவர்களேவிடச் சிறந்தவர்கள். அவர்கள் பழைய நூல்களே நுகர்வதோடு, புதிய நூல்களைப் பலரும் நுகர்ந்து இன்புறும்படி இயற்றுகிறவர்கள்: கல்வி மான்களாக இருப்பதோடு கவிச்சிங்கங்களாகவும் திகழ் கின்றவர்கள். இந்த இருவகை ஆற்றலும் இருந்தால்தான் புலமை முழுமை பெறும். பழஞ்செல்வத்தைப் பாது காத்துப் பயன்பெற்றும் பிறர் பெறச்செய்தும் வாழும் செல்வர். தம் முயற்சியிஞல் தாமே புதுச்செல்வத்தை ஆக்கியும் அளித்தும் வந்தால் செல்வம் குறையாமல் வளரும்; பலருக்கும் பல காலத்தும் பயன்படும். கவிஞர்கள் அத்தகையவர்கள். பழம் பனுவல்களைப் படிப்பதும், புதுப் பனுவல்களைப் படைப்பதும் ஆகிய இருவகை ஆற்றல்களும் சகலகலாவல்லியின் திருவருனால் கிடைக்கும். -

ஆதலால் அந்த இருவகை ஆற்றல்களையும் தமக்கு அருளும்படி வேண்டுகிருர் முனிவர். -

இயற்றப்படுவன் எல்லாம் பனுவல்கள் ஆவதில்;ை இயற்றியவர் காலத்திலேயே மடிந்தொழியும் நூல்கள் பல காலவெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படும் நூல் க்ளே பெரும்பான்மையாக இருக்கும். புலவர்கள், பல காலும் நிற்கும் நூல்களேயே ஆராய்வார்கள். அவை அவர்கள் தூக்கும் பனுவல்கள்: ஆராய்வதற்குரிய நூல்கள். மக்கள் வாழ்வைத் தூக்கி நிறுத்தும் பயனுள்ளவையும் அவை. அவை எல்லாத் துறைகளிலும் உள்ளன.

அத்தகைய நூல்களே மேலெழுந்தவாரியாகப் படித்துப் பயனில்லை; அவற்றில் ஆழவேண்டும்; படிய வேண்டும்: தோய வேண்டும். நீர்த்துறைக்குச் சென்றவன், கரையில் இருந்து பார்த்துவிட்டு வருவதில் என்ன பயன் இருக்கிறது . ஒரு கை ஆள்ளிக் குடித்தால்கூடப் பெரும் பயன் இல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/45&oldid=557876" இலிருந்து மீள்விக்கப்பட்டது