பக்கம்:சகல கலாவல்லி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛盛“ ஆக அாவல்ஜி

Guಬಗೆ. அதற்குச் சேதற்லே முகாப்பது என்பது சொற் பொருள். -

குமரகுருபர முனிவர் சகலகலா வல்வியினிடம் ஒரு இளுவை எழுப்புகிருர், 'படைக்கும் தொழில் செய்யும் பிரமனுடைய நெஞ்சிலும் நாவிலும் வாழும் தேவியே, கவிதையைப் படைக்கும் தொழிலப் பெற்ற என்னுடைய நெஞ்சிலும் நீ எழுந்தருளக் கூடாதோ?' என்று கேட்கிருர்,

"வெண்டாமரையில் எழுந்தருளும் நீ பிரமன் நெஞ்சத் திலும் உறைகிருய். உவி திருத்தாள் அவன் உள்ளத்தில் மலருகிறது. அதுபோல் என் உள்ளத்திலும் உன் திருவடித் தாமரை மலரக் கூடாதா?’ என்பது போலச் சொல்கிரு.ர்.

'அழுக்கு நிறைந்த உன் உ ன் வ'த் தி ல் எப்படி உறைவது?" என்று சகலகலாவல்லி கேட்டால் என்ன சொல்வது? "இல்லை, இல்லை. என் உள்ளம் மாக மறு அற்றது' என்று சொல்லலாமா? அப்படிச் சொல்வது அகங்காரத்தின்பாற் படும். 'என் உள்ளம் குழம்பி அழுக் காகத்தான் இருக்கிறது. ஆளுலும் உன் பாததாமரை அதில் மலர வாய்ப்புண்டு என்று வெளிப்படையாகவே சொல்வியிருக்கலாம். கவிஞர்கள் குறிப்பாகச் சொல்கிற வர்கள். அந்தக் குறிப்பு அவர்களுடைய வாக்கில் சுவையை உண்டாக்கும். - • -

குமரகுருபர முனிவரும் தம் நெஞ்சிலும் சகலகலா வல்லியின் திருவடிமலர் மலர்வதற்குப் பொருத்தமான காரணம் உண்டு என்பதை நுட்பமான முறையில் சொல் கிருர், "பாத பங்கேருகம் என்னும் தொடர் அந்தக் குறிப்பை உள்ளடக்கி நிற்கிறது, .

தாமரை சேற்றில் முகாப்பதளுல் பங்கயம், பங்கேருகம் என்ற பெயர்களைப் பெற்றது. தாமரை எழிலும் தூய்மை பும் உள்ள மலர்: ஆளுல் அது முளைக்கும் இடமோ குழம்பிய சேறு. தடாகத்தில் நீருக்கு அடியில் சேறு இருப்பதளுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/51&oldid=557882" இலிருந்து மீள்விக்கப்பட்டது