பக்கம்:சகல கலாவல்லி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடித் தாமரை 翻劇

தாமரை முகாத்து வளர்ந்து மலர்கிறது. இவற்றையெல்லாம் நிகணக்கும்படி செய்கிறது. பாத பங்கேருகம் எகிற தொடர்,

'உன் திருவடி சேற்றில் முளைத்த தாமரை போன்றது. என் மனமோ பல குழப்பங்களையும் தீமையையும் உடையது: சேறு உடைய தடாகம்போல இருப்பது, இத்தத் தடா கத்தில் உள் திருவடி மலர்வதற்கு நியாயம் இருக்கிறது, பங்கேருகம் என்ற பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானுல் அது சேற்றில் மு&ாக்க வேண்டும்; மயலாகிய சேறு நிரம்பிய குளம் போல உள்ள அடியேனுடைய நெஞ்சத்தில் உன் தாமரை போன்ற திருவடி மலரலாமே ! அப்படி மலராததற்கு என்ன காரணம்?' என்று விரித்துப் பொருள் கொள்ளும்படி பாடல் அமைந்திருக்கிறது. 4

பாடலேப் பார்ப்போம் :

பஞ்சப்பு இதந்தரு செய்யபொந்'

பாத பங் கேருகம்என். நெஞ்சத் தடத்துஅல. ராதது என்னே !

நெடுந் தாட்கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந்

நாவும் அகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய், சகல கலாவல்லியே !

நீண்ட தண்டை யுடைய தாமரையில் அமர்ந்து, அன்னக்கொடியை ஏந்தியிருக்கும் பிரமதேவனுடைய சிவந்த நாவிலும் உள்ளத்திலும் வெள்சேத் தாமரையாகிய இருக்கையைப் போல அமர்ந்திருப்பவளே. எல்லாக் கல் களுக்கும் உரியவளே, செம்பஞ்சுக் குழம்பை அப்பியதும். . அடியார்களுக்கு நன்மையைத் தருவதும், செந்நிறமானதும், பொலிவையுடையதுமாகிய நின்னுடைய திருவடித்தாமரை அடியேனுடைய உள்ளமாகிய தடாகத்தில் மலராமல் இருப்பது ரன் 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/52&oldid=557883" இலிருந்து மீள்விக்கப்பட்டது