பக்கம்:சகல கலாவல்லி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சிகல கலாவல்வி

இறைவனேக் 5ఉ நிறையத் தரிசித்துக் கருத்து நிறையத் தியானிக்கும் இந்த அநுபவத்தைச் சகலகலா வல்லியின் அன்பரிடத்திலும் காணலாம். ஆகவே,

அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய், சகல கலாஇல்வியே!

என்று குமரகுருபரர் பாடுகிரு.ர்.

இவ்வாறு மறைகளிலும் ஐம்பூதங்களிலும், அன்பர் களின் கண்களிலும், கருத்துக்களிலும் நிறைந்து விளங்கும் சகல கலாவல்லியிடம் விண்ணப்பம் ஒன்றைச் சொல்கிருர், தமக்குப் பலவகையான கல்வித் திறமையும் வருந்தாமல் எளிதிலே வாய்க்கும்படி அருளவேண்டும் என்று சொல் கிருர்,

தமிழில் மூன்று வகை உண்டு என்று சொல்வது மரபு. இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் முத்தமிழ் என்று சொல்வார்கவி. இந்த மூன்றும் எல்லா மொழிகளிலும் உள்ளன. என்ருலும் தமிழில்தான் இந்த மூன்றையும் ஒரு கொத்தாக்கி முத்தமிழ் என்று சொல்லும் வழக்கு இருக் கிறது. இந்த மூன்றும் மொழியோடு தொடர்புடையவை.

"உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் என்று இலக்கியத்தைக் குமரகுருபரர் கூறுவார்டு உள்ளத்தின் உணர்ச்சியிஞல் எழுவது கவிதை. ஆதலின் இயல் தமி முக்கு உள்ளம் இன்றியமையாதது. இசைத் தமிழுக்குக் குரல் வேண்டும். உள்ளத்து உணர்வும்வேண்டும். அதை மனே தர்மம் என்று இசைவல்லுநர் கூறுவர். உள்ளம் உரை என்னும் இரண்டு கரணங்களும் இணைந்து செயல்படச் செய்வது இசை நாடகத்தில் பாவங்களுக்கு அடிப்படை யான உணர்வும், உரையாடலும், உடலுறுப்புக்கள் தோற்றுவிக்கும் மெய்ப்பாடுகளும் வேண்டும். அதில் உள்ளம், உரை, உடல் என்னும் மூன்று கரணங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/57&oldid=557888" இலிருந்து மீள்விக்கப்பட்டது