பக்கம்:சகல கலாவல்லி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&ð > - ச்கல கலாவல்லி

எனவே, பழைய நூல்களே ஓதி உணரும் கல்வியாற்ற

ஆம் புதிய நூல்களே இயற்றும் கவியாற்றலும் புலவனென்ப தற்குரிய இலக்கணங்கள். பழங்காலத்தில் புலவர் என்ருல்

கல்வி கற்றுக் கவிபாடும் திறலுடையோர்களேக் குறிப்பார்

கள். இப்போது கற்றவரைப் புலவரென்றும், கவி பாடு பவரைக் கவிஞர் என்றும் வேறு பிரித்துச் சொல்கிருரிகள்.

கல்வியாற்றலும் கவிாற்றலும் ஒருங்கே அமையும் இயற்றமிழ்ப் புலமை தமக்கு வேண்டும் என்றே குமரகுரு பரர் சக்ல கலாவல்லியை வேண்டுகிரு.ர். கல்வி என்று நூலறி புலமையையும், தீஞ்சொற் பனுவல் என்று நூல் படைக்கும் புலமையையும் சொல்கிருர்,

"மூன்று தமிழையும் நான் நிளேக்கும்பொழுது எளிதில் வரும்படி அருளவேண்டும்’ என்று வேண்டுகிருர், எல்லோ ரும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது. மதி நுட்பம் உடையவர்கள் கல்வியில் வல்லவர்கள் ஆவார்கன், ஆளுல் பல காலம் பயில்வதஞல் அந்தக் கல்வியறிவு நிறையும். கலைமகளின் திருவருள் இருந்தால் எளிதில் அது கைகூடும். ஒரு முறை படித்தாலே மனத்தில் பதிந்துவிடும். ஒதுதல் என்ருல் பலகாலும் பயிலுதல். அருளாளர்கள் ஒரு முறை கேட்டாலும், படித்தாலும் மனத்தில் பதித்துக் கொள்வார்கள். ஏக சந்தக்கிராகிகள் என்று வடமொழியில் சொல்வார்கள். அவர்களே ஒதாது உணர்ந்தவர்கள்.

அவ்வாறு, பலகால் முயன்று பெருமல் எளிதிலே - தமக்கு முத்தமிழ்ப்புலமையையும் பாலிக்க வேண்டும் என்று வேண்டுகிருர் ஆசிரியt. • -

பண்ணும் பரிதிமும் கல்வியும்

- தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதுஎளிது எய்தநல்

காய் எழு தாமறையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/59&oldid=557890" இலிருந்து மீள்விக்கப்பட்டது