பக்கம்:சகல கலாவல்லி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அநுபவமும் பயனும் இது

காதுக்கு இனிக்கும் பாட்டைப் படிப்பதோடு நிற்கக் கூடாது; கருத்துக்கு இனிக்கும் பொருளே உணர்வதோடு அமையக் கூடாது. அதற்கு மேலும் சென்று பயனேப் பெற வேண்டும். சொற்பாவும் பொருள் தெரிந்து துய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளே வாங்கா தானே' என்று திருநாவுக்கரசு சுவாமிகன் அருளிச் செய்திருக்கிருர், துய் மையை நோக்கி இரண்டறக் கலந்தவன் உள்ளத்தில் இருள் நீங்கி ஒளி பாயும். -

எல்லோரும் பாட்டை எளிதில் படித்துவிட முடியாது, அதற்கு ஒரு தகுதி வேண்டும். கைேமகள் திருவருளால் அந்தத் தகுதி அமையும். அதற்குமேல் அதன் பொருளேத் தெள்ளத் தெளிவதற்கும் கலைமகளின் அருட்பார்வை வேண்டும், அதோடு நின்ருலும் போதாது. பாட்டின் பயனப் பெறவேண்டும். அதற்கும் சகலகலா வல்லியின் கடைக்கண் பார்வை வேண்டும். -

இவற்றை யெல்லாம் எண்ணிக் குமரகுருபா முனிவர் பாடுகிரு.ர். சகலகலா வல்லியே, பாட்டு, பொருள். அதஞற் பொருந்தும் பயன் ஆகிய இவை என்னிடம் நீயே கூட்டுவிக்க வேண்டும்; அதற்காக உன்னுடைய கடைக்கண் பார்வையை எனக்கு நல்கவேண்டும்' என்று வேண்டுகிருர்,

பாட்டும் பொருளும் பொருளால்

பொருந்தும் பயனும் என்பால் கூட்டும்படி நின் கடைக்கண்

நல்காய் ! х கமைகளின் தொண்டர்களாகிய கவிஞர்கள் தம் உள்ளத்தினல் தெள்ளத் தெளிந்து கவிதை மாரி பொழி கிரு.ர்கள். முன்பு, "உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு, களிக்கும் கலாப மயிலே' (3) என்று இந்த மாலையில் பாடினர். அத்தகைய புலவர்கள் உளம் கொண்டு இட்டும் கவிதைக் க ைமிக அரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/64&oldid=557895" இலிருந்து மீள்விக்கப்பட்டது