பக்கம்:சகல கலாவல்லி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ 鬱器歇 ಷಣrಟಟೆಣ್ಣಿ

அழகிய கல் புலவர்களும் முக்குண வயப்பட்டவர்களா தலின் அவர்கள் பாடுவன எல்லாம் ஒரு சீராக அமைய முடியாது. அவர்களேக் கேட்டாலே, சிலவற்றைச் சுட்டி, "இவை நான் பாடிய சிறந்த கவிதைகள்' என்று சொல் வார்கள். ஆகவே அவற்றிலும் தரம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.

நம் வாழ்நாள் சிறியது. புலவர்கள் இயற்றிய எல்லா வற்றையும் ஓதி உணர்வது என்பது இயலாத காரியம். அவற்றுக்குள் நமக்குப் பயன்படுவனவற்றைத் தேர்ழ் தெடுத்துப் பயிலவேண்டும். வாழ்க்கையில் மக்களுக்கு வெவ்வேறு வகையில் சுவை இருக்கும். வெவ்வேறு வகையில் பயனும் இருக்கும். ஒரு பெரிய விருந்தில் பரிமாறும் எல்லா உணவுகண்யும் எல்லாரும் உண்பார்கள் என்று சொல் வதற்கு இல்லே. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகை உணவு பிடிக்கும். சிலவற்றை உண்ண விரும்பாமல் ஒதுக்குவதும் உண்டு. அவ்வாறே கவிதையிலும் நமக்கு வேண்டாத வற்றை ஒதுக்கி வேண்டியவற்றைப் பயிலவேண்டும்.

நீரையும் பாலேயும் கலந்து வைத்தால் அன்னப்பறவை நீரை விட்டுப் பால் உண்ணும் என்று சொல்வார்கள், நூல்களைப் படிப்பதிலும் நாம் அன்னத்தைப் போல இருக்க வேண்டும். - r - -

"கல்வி கரைஇல; கற்பவர் நாள்சில: மெல்ல நினைக்கின் பிணிபல;-தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழியப் பால்உண் குருகின் தெரிந்து (கல்வி, 5) என்று நாலடியார் கூறுகிறது. இந்தப் பாட்டில் அன்னத் தையே உவமை கூறுகிருர் புலவர். . . -

கலைமகளின் தொண்டர்களாகிய புலவர் ലേലെ கலைத் தமிழ், பாற்கடல் போல விரிந்திருக்கிறது. அதில் நீரும் கலந்திருக்கும், நாம் பாலையும் நீரையும் வேருக அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/65&oldid=557896" இலிருந்து மீள்விக்கப்பட்டது