பக்கம்:சகல கலாவல்லி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so சகல கலாவல்லி

என்பது திருக்குறள், அவையில் பேச மாட்டாதவர்கள் என் வளவு கற்றிருந்தாலும் மணம் இல்லா மலரைப் போன்ற வர்களே. சொல்வன்மை இருந்தால்தான் கல்வி விளக்கத் தைப் பெறும். இதை உணர்ந்த குமரகுருபரர் முனிவர். சகல கலாவல்லியிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிரு.ர். "தாயே, நான் கற்ற கல்வியைப் பயன்படுத்தி அவைகளில் சொல் வளத்தோடு பேசவேண்டும். அதற்கு வேண்டிய திறமையை எனக்கு அருளவேண்டும்' என்று தொடங்கு கிருர், - -

சொல்விற்பனமும்... தந்து அடிமை கொள்வாய்.

விற்பனம் என்றது, புலமை: வாக்கு வளம் வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்கிரு.ர். அவையில் நன்கு பேச வல்லவரை வாக்கி என்று சொல்வார்கள். வாக்வி என்ற வடசொல்லின் திரிபு அது. நாவன்மை இருத்தால் பலரையும் மகிழச் செய்யலாம். பதியிைரம் பேருக்கு ஒருவரே வாக்கு வன்மை உடையவராக இருப்பார்களாம்.

'ஆர்த்தசபை நூற்ருெருவர்:

ஆயிரத்தொன் ரும்புலவர் வார்த்தை பதின யிரத்தொருவர்" என்று கணக்குச் சொல்கிருர் ஒளவையார்.

கற்றவர்கள் நினைவாற்றலுடன் இருந்தால் கற்றவற்றை நன்முகப் பயன்படுத்த முடியும். சற்றவற்றை மறந்து போனல் அவர்களுடைய கல்வி பயன் படாது. سانتا ماه குடத்தில் நீரை விட்டுக்கொண்டே இருந்தாலும் அது நிரம் பாது எவ்வளவு கற்ருலும் அவற்றை மனத்தில் தேக்கிக் கொள்ளாமல் இருந்தால் படித்தும் பயன் இல்லாமல் போய் விடும். அவையில் பேசுகிறவர்களுக்கு ஞாபகசக்தி இன்றி யமையாதது. இராமனுடைய அம்பருத்துாணியில் எடுக்க எடுக்க அம்புகள் வருவதைப்போல, நினைவாற்றல் உடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/69&oldid=557900" இலிருந்து மீள்விக்கப்பட்டது