பக்கம்:சகல கலாவல்லி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைனர்களும் கலைமகன் வழிபடுவதுண்டு. சிவகசிந்தாமணியில் முதல் இலம்பகமே நாமகள் இலம்பகம். சீவகன் கல்வியில் வல்லவளுளுன் என் பதை, 'நாமகள் நலத்தையெல்லாம் நுகர்ந்த"தாகச் சொல்வார் திருத்தக்க தேவர். அவனுக்குக் கல்வி கற்பிக்கப் புகுந்ததை, 'குழைமுக ஞானமென்னும் குமரியைப் புணர்க்க லுற்ருர்’ என்று கூறுகிரும் 'X', ஆசிரியர். +

கலைமகளே நாற்பத்தொன்பது புலவர்களாக இருந்து தமிழ் ச் சங்கத் தில் வீற்றிருந்ததாகத் திருவியோடற் புராணம் சொல்கிறது. கம்பர் கலை மகளின் அருள் பெற்ற ೬೧೧ಗೆ. ஒட்டக்கூத்தரும் அவள் திருவருளைப் பெற்ருர். அவர் பெயரால் வழங்கும் கூத்தனூரில் கலைமகள் திருக்கோயில் அவர் நிறுவினர். தாம் பாடிய தக்கயாகப் பரணி யில், கூத்தனூரில் அரிசிலாற்றங்கரையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் கலைமகளே,

"ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே" என்று பாடுகிருt.

கலைமகளின் துதிகளாகச் சில தனிப்பாடல் களும் சில நூல்களில் உள்ள வாழ்த்துக்களும் உள்ளன. சரசுவதி சிந்தன என்ற பாடல் ஒன்று உண்டு. பாரதியார் கலைமகளைச் சில பாடல்களால்

பாடியுள்ளார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/7&oldid=557838" இலிருந்து மீள்விக்கப்பட்டது