பக்கம்:சகல கலாவல்லி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று வரம் ŝi

வர்கள் சொல்வளம் அவர்கள் கற்ற நூல்களினுல் சிறப் படையும். பல நூல்களேக் கற்பதன் பயனே ஆது. -

ஞாபகசக்தி உள்ளவர்கள் பேசுகையில் இடத்துக்கு ஏற்ப மேற்கோள்க&ளக் காட்டும்போது, கேட்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பேசும்போது, அவர்களுக்குத் துணேயாக வள்ளுவரும், கம்பரும், கபிலரும், பரணரும் அவ்வப்போது வந்து கைகொடுப்பார்கள். பாயசத்தில் ஏலம் போட்டாற் போலவும்; முந்திரிப்பருப்பைப் போட் டாற் போலவும் பேச்சினிடையே அந்தப் பேரறிஞர்களின் திருவாக்குகள் வந்து சுவை ஊட்டும். 姆

சிறந்த நிக்னவாற்றல் உடையவர்கள் கேட்டதை உடனுக்குடன் நினேவில் பதித்துக் கொள்வார்கள். 93 முறை சொன்ஞலும் உடனே அதை உள்ளத்தில் பதித்துக் கொள்பவர்களை ஏகசந்தக்கிராகிகள் என்று சொல்வார்கள்.

ஒரே சமயத்தில் பலவற்றைக் கவனித்து மனத்தில் நிறுத்துபவர்கள் பின்னும் சிறப்புடையவர்கள். அவ்வாறு கவனத்தில் வைத்து வெளிப்படுத்தும் ஆற்றதே அவதானம் என்று சொல்வார்கள். ஒரே சமயத்தில் பலவற்றைக் கேட்டு அவற்றை மீட்டும் சொல்லும் அவதானத் திறமை மிக மிகச் சிலருக்கே வாய்க்கும். ஒருவருக்குக் கவியை விளக்குவது, ஒருவர் கொடுத்த கணக்கைப் போடுவது, வருஷம் மாதம் தேதி முதலியவற்றைச் சொல்ல அந்த நாள் இன்ன கிழமை என்று சொல்வது, முதுகில் சிறு சிறு பரல்களே ஒருவர் போட்டுக் கொண்டே இருக்க அவற்றை எண்ணுவது ஆகிய பலவற்றை ஒருங்கே அறிந்து நினைவில் வைத்துக் கொண்டு வெளிப்படுத்தும் அவதானிகள், வட மொழியிலும் பிறமொழிகளிலும் வல்ல புலவர்களில் சிலர் இருந்திருக்கிரு.ர்கள் காளமேகம் அவ்வாறு அவதானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/70&oldid=557901" இலிருந்து மீள்விக்கப்பட்டது