பக்கம்:சகல கலாவல்லி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ச்கல் கலாவல்லி

விட முடியாது. அந்த அந்த வேக்ாயில் உண்ணும்போது சுவை தந்து பசியைப் போக்கும் உணவு போன்றவை அவை. கவியோ எல்லாக் காலத்தும் நெல்லே விக்ாவித்து அவ்வப் போது வேண்டிய உணவைச் சமைத்துக் கொள்ள உதவும் வினை நிலம் போன்றது. -

'எனக்கு இப்போது பசி போகச் சோறு இடு. இனிப்புப் பண்டமும் பாயசமும் சேர்ந்த விருந்தை வழங்கு” என்று கேட்டவன் பிறகு, "என்றைக்கும் நின்று பயன் தரும் நிலத்தை வழங்கு’ என்று கேட்பதைப்போல முனிவர் சகல கலாவல்லின்ய வேண்டுகிருர். முதலில், *சொல்விற்பனம் அருள்' என்ருர்; பிறகு, "அவதான ஆற்றல் வழங்கு' என்ருர்; மூன்ரும் முறையாக, "கவி சொல்லும் கலேத் திறமையைத் தந்தருள்' என்று கேட் கிருர். ஒரு முறைக்கு மூன்று முறை என்று சொல்வது வழக்கம். முனிவரும் இது தா, அது தா என்று கேட்டவரி கடைசியாக, மூன்ருவது முறையாக, நெடுங்காலம் நிற்கும் வரத்தை வேண்டுகிருர்,

சொல்விற்பன்மும் அவதானமும் கவி சொல்லவல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்

என்பது அவருடைய வேண்டுகோள். கவி சொல்லும் ஆற்ற ை நல்வித்தை என்று சிறப்பிக்கிருர். இந்த மூன் றையும் பெற்று விட்டால் கலைமகளுக்கு அடிமையாகி விட லாம். உண்மையாகக் கலைமகளின் திருவருள் பரிபூரண மாக வாய்த்தால் இப்படி மூன்று கலைகளிலும் வல்லவர் க்ளாக இருப்பார்கள். பழுத்த அமிழ்ப் புலமை அது. வாணிதாசர், கமைகளின் அடிமை" என்று அவர்கள் விலாசம் போட்டுக் கொள்ளலாம். "இந்த மூன்றையும் தத்து உனக்கு அடிமையாக்கிக் கொள்ள வேண்டும்" என்று

குமரகுருபர முனிவர் வேண்டுகிரு.ர்.

இனிக் கலைமகளின் புகழை விரிக்கிருt;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/73&oldid=557904" இலிருந்து மீள்விக்கப்பட்டது