பக்கம்:சகல கலாவல்லி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ஞ்ஞானத்தில் தோற்றம் eol

என்னிடம் ஒர் அன்பர் வந்தார். 'ஐயா, ஒரு புலவர் கம்பராமாயணத்தில் வீடணன் அடைக்கல்ப் படலம் சொன்ஞர். நன்முக இருந்தது. உடனே கம்பராமாயணப் புத்தகம் வாங்கினேன். படிக்கத் தொடங்கினேன். அவர் சொன்ன பாடல்களேத் தவிர மற்றவற்றிற்குப் பொருள் விளங்கவில்.ை என்ன செய்வது ?" என்ரு.ரி.

"ஓர் அகராதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னேன்.

'கம்பராமாயணச் சொற்கள் எல்லாம் அதில் இருக்குமா ?" என்முரி. -

"இருக்கும்' என்றேன். சிலகாலம் கழித்து மறுபடியும் அந்த அன்பர் வந்தார். ஒரு சொற்பொழிவாளர் ஒரு நாள் வில்லி பாரதத் திலுள்ள கிருஷ்ணன் தூதை விரிவுரை ஆற்றிஞர். நன்முக இருந்தது. வில்லிபாரதம் புத்தகம் வாங்கினேன். அதைப் படிக்கும்போது பலவற்றிற்குப் பொருள் தெரியவில்லையே!” என்ருர்,

'அகராதியைப் பாருங்கன்' என்றேன். "எல்லாச் சொல்லுக்கும் பொருள் இருக்குமா ?" என்று கேட்டார். -

"நிச்சயம் இருக்கும்' என்றேன்; பின் ஒரு நான் அந்த அன்பர் வந்து இப்படியே கந்த புராணத்தைப் பற்றிக் கேட்டார்: "அகராதி வாங்கிப் பாருங்கள்’’ என்றேன். பெரிய புராணம், திருவிகளயாடல் என்ற புத்தகங்களைப் படிக்க விரும்பி, பொருள் தெரிந்து கொள்ள வழிகேட்டார். 'அகராதி வாங்கி வைத்துக் கொண்டு பாருங்கள்' என்று சொன்னேன்.

மறுபடியும் அவர் ஒரு நாள் வந்தார். 'கம்பராமாயணச் சொற்கள் எல்லாம் அகராதியில் இருக்கும் அல்லவா ? என்முர், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/78&oldid=557909" இலிருந்து மீள்விக்கப்பட்டது