பக்கம்:சகல கலாவல்லி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ஞ்ஞானத்தில் தோற்றம் 7;

பொருள் இருந்தாலும், அவற்றிக் இணைப்பிலே இரண்ட பொருள் ஏதும் கிடைப்பதில்லே,

சொற்ருெடருக்கும் வாக்கியச் சேர்க்கைக்கும் உள்ள தொடர் கருத்து அல்லது பிழம்புப்பொருள் ஒன்று இருக்க வேண்டும் என்பதை இவற்ருல் உணர்ந்து கொள்ளலாம். ஆகவே பனுவல்களில் சொல் இருக்கிறது; பொருள் இருக் கிறது; அவற்றிற்குமேலே சொற்ருெடர்ச் சேர்க்கையிஞல் தோன்றும் கருத்து இருக்கிறது. இந்தக் கருத்தின் சிறப் பிளுல் பனுவல் பெருமை பெறுகிறது. -

அந்தக் கருத்துக்கு ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு தொடரும் அவற்ருல் தனித்தனியே புலப்படும் பொருளும் உறுப்புக்களாக அமைகின்றன. 'அந்தக் கூட்டினல் உன் டாகும் பொருளே பனுவலுக்கு உயிராக அமைகிறது. வெவ்வேறு செயலைச் செய்யும் உடலின் உறுப்புகள் எல்லா வற்றினுாடும் உயிர் அமைந்து தொடர்பு படுத்துவது போல, அந்தக் கருத்து அல்லது அறியப்படும் பொருள் இருக்கிறது. அதையே அறிவு அல்லது ஞானம் என்று சொல்லலாம்.

சொல்லின் பொருளைத் தெரிந்து கொள்வதற்குமேல் நூலின் முழுமையிலும் அமைந்ததைத் தெரிந்து கொண் டால் நமக்கு நூலறிவு உண்டாகும்; அதைப் பெறுவதுதான் மொழியின் பயன். அத்தகைய அறிவிலும் உண்மையும் , உறுதியும் உள்ளதாக இருப்பது சிறந்தது. அறிவு, உணர்வு ஆகியவற்றைப் பல வாக்கியங்களின், கோவையால் பனுவல் கள் நமக்கு ஊட்டுகின்றன. * 、 -

நூல்களேப் படிப்பதளுல் உண்டாகும் இந்த விளைவை மெய்ஞ்ஞானம் என்று குமரகுருபரர் கூறுகிருர். வெறும் எழுத்திலே அது கிடைப்பதில்:ை ஆலுைம் எழுத்து இன்றி யமையாதது. வெறும் சொற்பொருளிலே , அந்த ஞானம் கிடைப்பதில்லை. ஆலுைம் பொருள் இன்றியமையாதது. வெறும் சொற்ருெடராலே அந்த உயிர் புலப்படாது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/80&oldid=557911" இலிருந்து மீள்விக்கப்பட்டது