பக்கம்:சகல கலாவல்லி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சகல கலாவல்ன்

சகல கலாவல்லி நடக்கிருள். அவள் நடப்பதளுல் கவிதை நடக்கிறது. இலக்கியம் நடக்கிறது. பெண்ணுக்கு நடை அழகு; அது போலவே இலக்கியத்துக்கும் நடை அழகு உண்டல்லவா ? கலைமகள் நடக்கிருள் என்ருல் நூலும் நல்ல நடை போடும்.

பொதுவாகப் பெண்களின் நடைக்குப் பிடியின் நடையையும் அன்னத்தின் நடையையும் உவமை கூறுவது வழக்கம், இரண்டு நடைகளிலும் மென்மை இருக்கும். கலைமகள் நடக்கிருள். அந்த நடை பிடியின் நடைபோல இருக்கிறது என்று சொல்வது சிறப்பன்று. மிகச் சிறந்த நல்ல பெண்யானை, தன் நடை பிற பெண்கண் நோக்க நன்முக இருந்தாலும் கலைமகளைப் பார்க்கும்போது தன் நடைக்கு அந்த அழகு வரவில்லேயே என்று நாணுமாம். நல்ல பிடிக்குத் துதிக்கை நீண்டிருக்கும்; நிலத்திலே வந்து படியும். 'நிலத்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடி’ என்று அதைச் சொல்கிருர் முனிவர். ஈர்ந்து நிலந்தோயும் இரும்பிடித் தடக்கை" என்று சிறுபாணுற்றுப் படையில் வருகிறது. அப்படிக் கையால் பெருமை பெற்றதாயினும் அந்தப் பிடியின் காலுக்குச் சிறப்புப் போதாது. அது காலால் நடக்கும் நடை கலைமகளின் நடைக்கு முன் விளக்கம் பெறுவதில்லை. இதை அறிந்து அது நடக்க நானுகிறதாம். மற்றப் பெண்களின் நடைக்கு முன்னே. "என் நடையைத்தான் உங்கள் நடைக்கு உவமை கூறு கிருர்கள் புலவர்கள், உவமையாக வருவதற்குத்தான் உயர்வு. ஆகையால் என் நடையே உயர்ந்தது' என்று

இறுமாக்கும் நற்குஞ்சரத்தின் பிடி கலைமகள் நடையைக் கண்டு. அந்த இறுமாப்பு அடங்கி, நாணிக் கோணிக் கொள்கிறதாம்.

அன்னங்களில் சிறந்தது அரசன்னம். அதன் வடிவமே மிக அழகியது. அதுகூடக் கலைமகளுக்கு முன் நடக்க நாணி நிற்கிறதாம், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/83&oldid=557914" இலிருந்து மீள்விக்கப்பட்டது