பக்கம்:சகல கலாவல்லி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*盘 சகல கலாவல்வி

பத்தாவது பாடலாகிய இறுதிப் பாடலில்தான் குமரகுரு பரர் எதற்காக இந்தப் பாமாலையைப் பாடிஞர்ோ அது இன்னதென்று தெரிந்து கொள்ளும் குறிப்பு இருக்கிறது. அந்தப் பாடலே இப்போது பார்ப்போம்.

குமரகுருபர முனிவர் சகல கலாவல்லியிடம் ஒரு வேண்டுகோனே விடுக்கிருர், அரசர்களும் என் கவிதை யைக் கேட்டு இணங்கி வரவேண்டும்" என்ற கருத்தை வெளியிடுகிரு.ர். புவியரசர்களும் கவியரசர்களேப் பணிந்து ஒழுகிய வரலாறுகள் பல உண்டு, - -

அரசர்கள் தம் பதவிக்கு ஏற்பப் பல வகை ஆடை யாளங்களைக் கொண்டிருப்பார்கள். சிங்காதனம், செங் கோல், கொடி முதலியவை அரசருக்குரிய சின்னங்கள், ! அவற்றில் முக்கியமானது குடை, குடை உடைமையால் அரசனுக்குச் சத்ரபதி என்ற பெயர் வடமொழியில் வழங்கும். அரசர்கள் கொண்டிருக்கும் குடை அவர்களுக்கு திழல் தருவதற்காக அமைந்தது அன்று. தம்முடைய நாட்டில் உள்ள குடிமக்கள் எல்லோருக்கும் நீங்கு வராமல் நலம் செய்து நிழல் பரப்பிப் பாதுகாப்பதைக் காட்டுவதே அந்தக் கு.ை

கண்பொர விளங்கும்தின் விண்பொரு வியன்குடை வெயில்மறைக் கொண்டன்ருே அன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் Er'’

என்று (35) புறநானூறு கூறுகிறது. மன்னனின் மேல் விளங்கும் கவிகை அவருடைய ஆட்சிக்குள் அடங்கிய நாடு முழுவதையும் தன் நிழலின் கீழ் வைத்துப் பாதுகர்ப். தாகச் சொல்வதும் மரபு.

"உலகுடன் நிழற்றிய

தொலையா வெண்கு.ை"

என்பது (204) அகநானூறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/87&oldid=557918" இலிருந்து மீள்விக்கப்பட்டது