பக்கம்:சகல கலாவல்லி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் 写船

அரசர் எடுத்த குடை அவர் ஆளும் நாடு முழுவதிலும் பரவிக் கவிந்து நிற்பது என்று சொல்லும் வழக்கத்தை ஒட்டிக் குமரகுருபரர், மண்கண்ட வெண்குடை” என்று தொடங்குகிரு.ர். அரசர்களின் குடை வெண்ணிறமாக இருக்கும்.

'கொங்கலர்தார்ச் சென்னி

குளிர்வெண் குடைபோன்றில் வங்கண் உலகளித்த லான்'

என்பது சிலப்பதிகாரம். -

உலகமெல்லாம நிழற்றுவதாகிய வெண்குடையின் கீழ் அரசர் வீற்றிருப்பார். குடையின் கீழே அவர் இருந்தாலும் அவர் பதவி மேம்பட்டது. பல மக்களுக்கும் இறைவராக மேலான நிலையில் இருப்பவர் அவர். அத்தகைய மன்னர்களும் தம்முடைய கவியைக் கண்டு பணிய வேண்டும் என்று சகலகலாவல்லியை வேண்டுகிருர் குமரகுருபரர்.

மண் கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண் கண்டளவில் பணியச்

செய்வாய்.

பண் என்றது ஆகுபெயராய்க் கவிதையைக் குறித்தது. கவிதையைக் கண்டவுடனே, இவர் பெருங்கவிஞர்' என்று மதிப்பு வைத்துப் பணியும்படி செய்ய வேண்டும். இசைப்பாடல்களுக்குத் தாளமும் பண்ணும் உண்டு. இயற் பாடலுக்கும் பண் உண்டு, இசையோடு பாடல்களைப் பாடுவது புலவர்களின் வழக்கம். இன்ன இன்ன பாடல் இன்ன ராகத்தில் பாடினல் சிறப்பாக இருக்கும் என்று புலவர்கள் சொல்வதுண்டு. எ ன் னு ைடய ஆசிரியப் பிராளுகிய ஐயரவர்கள் வெண்பாவைச் சங்கராபரணத் திலும், ஆசிரியப்பாவை ஆரபியிலும், கட்டளேக் கலித் துறையைப் பைரவியிலும், விருத்தங்களே வெவ்வேறு ராகங் களிலும் பாடுவது சிறப்பு என்று சொல்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/88&oldid=557919" இலிருந்து மீள்விக்கப்பட்டது