பக்கம்:சகல கலாவல்லி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.

சீ.

3.

És

கலைமகள் துதிகள்

சிந்தா தேவி, செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே, நாமிசைப் பாவாய், வானோர் தலைவி, மண்ணோர் முதல்வி, ஏனோர் உற்ற இடர்களைவாய், - . - - (மணிமேகலை, 14: 17-20)

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை-தூய உருப்பளிங்கு போல்வாள். என் உள்ளத்தின் உள்ளே இருப்பள்;இங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச்செவ் வாயும் கடிகமழ்பூந் தாமரைபோற் கையும்-துடிஇடையும் அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால் கல்லும்சொல் லாதோ கவி ?

பொத்தகம், படிக மாலை குண்டிகை, பொருள்சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை

1. கலைநியமம் - கலைக்கோயில். ஏனோர் - பிறர். 2. ஏய = பொருந்த, உருவம் பளிங்குபோல வெண்மையாக இருப்பவள். 3. கடி - மணம். துடி - உடுக்கை. அனவரதமும் - எப்பொழுதும். 4. குண்டிகை - கமண்டலம், வித்தகம் - முத்திரை, கொந்து அணுகபாரம் - பூங்கொத்துக்களை அணிந்த கூந்தல். முகிழ் - அரும்பு போன்ற. தவளமேனி - வெண்மையான நிறம், மைத்தகு - மையை இடுதற்கு ஏற்ற தகுதியுடைய; சுமங்கலத்தன்மையை உடைய என்றபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/93&oldid=1052101" இலிருந்து மீள்விக்கப்பட்டது