பக்கம்:சகுந்தலா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா I ○ア ஆகவே உள்ளத்தின் கொதிப்பால் முக மலர் வாடியது" அதையெல்லாம் கவனிக்கும் குணம்தான் ஞானசம்பந்தரிடம் இல்லேயே ! உலகு. ஏன் பயந்து நடுங்க வேண்டும் என்றுதான் விளங்கவில்லே அவனுக்கு. பெரியவரின் கோபத்தையும் கொதிப்பையும், சுபாவத்தையும் உணர்ந்து சிறு பெண்ணுன அவள் அஞ்சி வாழ்கிருள் போலும் ! - இப்படி அவன் மனம் பிரச்னை எழுப்பி விடையும் கொடுத்தது. ஆளுல் உலகு பயந்ததன் காரணமே வேறு. அடுப்பங் கரையில் ஏதோ 'கைச்சோலி'யாக இருந்த சகுந்தலை உலகு, இலே போட்டு. தம்ளர்களில் குடிக்கத் தண்ணி எடுத்து வை' என்று சொன்னுள் ஆரம்பத்தில். அவ்விதமே செய்து முடித்து திருப்தியுடன் செய்தாச்சு 1 என்று கூறினுள் உலகு. தான் செய்த காரியத்தில் தவறு இருக்கும் என்ற சந்தேகமே எழவில்லே அவளுக்கு. அது இவ்வளவு பெரிய கூப்பாட்டுக்கும் குழப்பத்திற்கும் இலக்காகக் கூடும் என்ற ஐயம் துளிகூட இல்லே. રૂ விளேவுகளைக் கண்டதும், தவறு செய்தது தானே தான் என்கிற உண்மை எங்கே அம்பலமாகிவிடுமோ, அத ல்ை பெரியவரின் எச்சு முழுவதும் தன் தலைமீதே விழ நேரிடுமோ என்ற கலவரம் பிறந்து அதிகரித்தது அவளுக்கு. அதனுல் அவள் அடிக்கடி சகுந்தலேயின் முகத்தைப் பரிதாப மாகப் பார்த்தாள். அந்தப் பார்வை தான் சகுந்தலேயின் உள்ளத்திலே இரக்க உணர்ச்சியை அதிகப்படுத்தியதோ, அல்லது தவறை அடுத்தவள் மீது சுமத்திக் கடமையைத் தட்டிக் கழிக்க முயலும் குற்றத்திற்காகக் கணவனின் கூப்பாடும் ஆத்திர மும் அளவு கடந்து விடலாம் என்ற அச்சமோ - அவள் உலகைக் கண்டிக்கவில்லே, பிறகு உலகு நான் கவனிக்காமல் செய்துவிட்டேன் அக்கா என்று மன்னிப்புக் கேட்கும் தோரனேயில் பேச வந்த போதுகூட சகுந்தலே கோபிக்க்வில்லை. உம் யாரைச் சொல்லி என்ன செய்ய யாரைக் கோபித்துத்தான் என்ன .பிரயோசனம் ! நானே கவனித்துச் செய்திருக்கனும், அதிலே தவறினால், வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியது தானே என்று அலுத்துக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/109&oldid=814695" இலிருந்து மீள்விக்கப்பட்டது