பக்கம்:சகுந்தலா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 சகுந்தலா கேட்டுத்தான் என்ன பிரயோசம்? அவர் நடவடிக்கை கள் அவர் வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாது. இந்தத் தடவை மட்டும் எப்ப திரும்ப வருவார் என்பது தெரிந்து விடுமா என்ன ! ஆனால் என்ன நடந்தது என்ருவது கேட்டி ருக்கலாம். அல்லது சகுந்தலேயின் போக்கிலே புதுமை பிதத்திருப்பதன் வயணமென்ன என்று அறிய முயன்றிருக் கலாம்’ என்று எண்ணினுன் அவன். அடுத்த வீட்டுச் சகுக்தலே திடீரென்று மாறிப்போன வள் போல் தான் தோன்றினுள். ரகுராமனுக்குத்தான் அப்படித் தோன்றியது. அவள் தோட்டத்தில் செடிகளின் அருகிலே கின்ருள். அவ்வேளைகளில் ரகு பின்பக்கம் வர தேர்ந்தால்,அவள் முன்போல் ஒடி மறைந்து கொள்வதில்லை. அமைதியாகத் திரும்பிப் பார்த்து விட்டு சாவதானமாக கடந்து செல்வாள். அவ்விதம் போவதற்குள்_அவன் மீது எத்தனே தடவை எத்தனே ரகப் பார்வைகள் வீசியிருப்பாள் என்பதை அவனே கணக்கிட இயலாது. அவள் கிரித்தாளா; சிரிக்க முயன்ருளா ; அல்லது சிரிப்பது போல் தோன் றியதா என்று அவன் மனம் குழப்பமுற்றுத் திணறும். இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு இந்தப் பழிக்கம் கூட மாறிவிட்டது. அவனேக் கண்டவுடன் நகர்ந்து செல் வதையே விட்டு விட்டாள் சகுக்தலே. கின்ற இடத்திலேயே தனது அலுவல்களேக் கவனிப்பவள் போல் நின்று விடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். ப டி த் த புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கவும், வேறு புஸ்தகம் வாங்கிக் கொள்ள வும் சதா உலகு தயவை நம்பி யிருக்கவில்லே அவள். கிணற் றருகில் அவன் நிற்கும் போது, துவளத்தையே இத்தகை யப் பரிவர்த்தனேகளுக்கு உரிய பீடமாகப் பயன் படுத்த அவள் தவறவில்லே, அவளது செயல்களில் தவருகக் கருதுவதற்கோ, தகாத எண்ணம் கொள்வதற்கோ இடமளிப்பவை எதுவு மில்லே. ஆரம்ப காலத்தில் நீடித்த புதுமைக் குழப்பம், சந்தேக மனோபாவமெல்லாம் கால ஒட்டித்தினல் தேய்ந்து மங்கிவிட்டது; கொஞ்சம் கொஞ்சமாகக் கூச்ச்ம் தெளிந்து சகஜபாவம் பெற்று வகுகிருள். அவ்வளவு தான் என்று கினேத்தான் ரகுராமன்! - :-.....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/130&oldid=814719" இலிருந்து மீள்விக்கப்பட்டது