பக்கம்:சகுந்தலா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சகுத்தலா சாய்ந்திருக்கலாமே எனும் ஆசையோடு சோபாவில் விழுக்தான். சிந்தையை அடக்கிச் சும்மா கிடக்கும் சாதனே பயில முயன்ற ரகுராமன் திடுக்கிட நேர்ந்தது, உடல் மீது என்னவோ வந்து விழுந்ததனால். சும்மா கண்களே மூடிக் கிடந்தவன் விழித்துத் தலேயைத் தூக்கிப் பார்த்தான். இரண்டு இலேகளோடு சேர்ந்த சிவப்புப் பூ ஒன்று அவன் மீது கிடக்தது. பூவா ஏதோ பல்லி கில்லி விழுந்து வீட்டதோ என்று பார்த்தேன் என முனங்கியது அவன் மனம். அதற்குப் பிறகு தான் பூ அங்கு எப்படி வந்தது என்ற கேள்வி பிறந்தது அவன் உள்ளத்தில். அவன் வாராந்தா ஜன்னல நோக்கித் திரும்பினுன். ஒருவேளை சகுந்தலே தான் அப்படிச் செய்திருப்பாளோ என்ற விபரீத ஆசை அவனுக்கு. அவள் திரும்பியதும் “குபுக் கெனப் பதுங்கி உட்கார்ந்து விட்டவளின் தலேயுச்சி தான் தெரிந்தது. 'களுக் கென்ற சிரிப்பும் கேட்டது. 'இந்த மூதேவியா ; உலகுதான் இந்தக் குரங்குதனம் செய்ததா சரிதான். அது இது மட்டும்தான செய்யும். எமப்பய புள்ளெயாச்சே அது ' என்று எரிச்சலுடன் புலம்பியது அவன் மனம், ’ஏ உலகு ஏ உலக்கை ! ஏ குந்தாணி ஏ. எருமை. மாடு!" என்று அர்ச்சனை புரிந்தான் ரகு. வவ் வவ் வவ்வே" என்று வாயில்ை வலிப்புக் காட்டிக்கொண்டே எழுந்து கின்குள் அவள் ! ‘பேஷ் செங்குரங்கு என்ருல் இப்பத்தான் உனக்குப் பொருந்தும் ! என்று கூறிச் சிரித்தான் அவன். அவள் கிடுசிடுத்தாள் : மூஞ்சியைப் பாரு ! குரங்காம்! உங்க முகறைக்கு எங்க மோறை ஒண்னும் கெட்டுப் போகலே. குங் தாணியாம், குத்துலக்கையாம் வவ்வவ்வே. உங்க கண்ணிலே கோளாறு இருக்கணும். டாக்டரிடம் காட்டுங்க சீக்கிரமா !” அவள் கோபம் அவனுக்கு குது கலம் தந்தது. அவளேக் கிண்டல் செய்து மேலும் முகம்"சிவக்கச் செய்ய வேண்டும். என்ற ஆசை உண்டாயிற்று. 'அம்மா உலகு ஏளா யேம்மா உலகு!’ என்று நீட்டினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/132&oldid=814721" இலிருந்து மீள்விக்கப்பட்டது