பக்கம்:சகுந்தலா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சகுந்தலா விடிந்ததும் அடுத்த வீட்டில் ஏதோ பரபரப்பு ஏற்பட் டிருந்ததை உணர முடிந்தது அவனுல். பொழுது போகாமல் தவித்த ரகு பின்புறக் கதவைத் திறந்து கொண்டு தோட்டத் துப் பக்கம் போனன். அங்கே பேச்சு சப்தம் கேட்டது. உலகுவும் சகுந்தலேயும் தான் பேசிஞர்கள். உலகு கெஞ்சினுள்; அக்தா அக்கா, நான் இங்கேயே இருக்கிறேனே. என்னே ஊருக்கு அனுப்பாதே பக்கா !” தீ ஊருக்கு போயிட்டு வா, உலகு. உன் அம்மாவை யெல்லாம் பார்க்க வேண்டாமா? இப்ப போ. கொஞ்ச காள் கழித்து நானே உன்னே கூப்பிட்டு அனுப்புகிறேன், என்ருள் சகுந்தலே. அக்கா அங்கே போகணும்னலே எனக்கு மனக் கஷ்டமா யிருக்கு. இங்கேயே வேலே எல்லாம் செய்து தொண்டு கிடக்கிறேன். உனக்கு நான் தொந்தரவு கொடுத் தால் சொல்லு' பரிதாபகரமாக ஒலித்தது அவள் பேச்சு. ஆனுல் சகுந்தலே கண்டிப்பாகப் பேசிள்ை. உலகுவைத் தன் வீட்டை விட்டு அனுப்பியே விடுவது என்ற தீர்மானத் தோடு பேசிள்ை, அம்மா வி ட் டு க் கு ப் போகணும்னு சொன்னுல், அழுகிற பொண்ணு உன்னத் தாண்டி பார்க் இறேன். உன்னே ஒரே படியாகத் தொலேஞ்சு போகவா சொல்லுது இங்கேயே ரொம்ப நாளா இருக்கியே அங்கே யும் ப்ோக வேண்டாமா என்று சொன்னுல் ஏங்கே வெட்டக் கொண்டு போறதுக்குப் புடிச்சுத் தள்ளில்ை அஞ்சி அலறது மாதிரிப் புலம்புறியே! என்று எரிந்து விழுந்தாள் சகுந்தலே. உலகுவின் கெஞ்சுதலும், கு ைழ வு ம் ரகுராமனின். இதயத்தைத் தொட்டன. அந்தப் புள்ளெ இங்கே இருந் தால் இவளுக்கு என்னவாம் : உலகு சொன்ன மாதிரி. பொருமை தான் வேலே செய்கிறதோ என்னவோ!' என்று நினைத்தான் அவன். உலகு எவ்வளவு கெஞ்சியும் பயனில்லே. சகுந்தலே தன் கணவனிடமும் முன்னதாகவே சொல்லி வைத்து விட்டாள் என்றே தெரிந்தது. உலகுவும் சகுந்தலேயும் பின்னல் நின்று வாதாடிக் கொண்டிருந்த போது, உள்ளிருந்து கத்தி ஞர் பெரியவர் : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/148&oldid=814738" இலிருந்து மீள்விக்கப்பட்டது