பக்கம்:சகுந்தலா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சகுந்தலா வந்தவள் சகுந்தலேக்குப் புதியவள் அல்ல. சில வரு ஷங்களுக்கு முன்பே அறிமுகமானவள் தான். சகுந், தக்லக்குக் கல்யாணமான புதிதில் ஞானசம்பந்தரைப் பற்றிப் பலரும் பலவிதமாகச் சொன்னர்கள். அவரது காமக்கிழத்தி பற்றியும் ரகசியமாகச் சொன்னர்கள். சகுக்தில்ேக்கு என்ன எண்ணுவது, என்ன செய்வது என்றே தெரியவில்லே. அப்போதெல்லாம் எது வந்தாலும் சகித்துக் கொள்ள வேண்டியது தான் ; வேறு என்ன செய்வது என்றிருந்த அவளது சகிப்புத் தன்மையை மிகுதியும் சோதிப்பதாக யிருந்தது கணவனின் போக்கு. கல்யாணமாகிச் சில மாதங்கள் வரை ஒழுங்காக வாழ்ந் ததனுல், அவர் திருக்தி விட்டார்; புது மனேவி மோகம் அவரை மாற்றிவிட்டது என்று பலரும் நம்பினர். அது தவருண தீர்மானம் என்பதை நிரூபித்துக் காட்டுவதற். காகவே, ஞானசம்பந்த வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறியது! அடிக்கடி அவர் வெளியூர்ப் பயணம், அவசர காரியம், சொந்த ஜோலி என்று போய்வர ஆரம்பித்ததன் மர்மம் மனேவி சகுந்தலேக்கு .மெது மெதுவாகத் தான் புரிந்தது. அந்த ரகசியம் பலர் காதுகளிலும் விழுந்து, பலப்பலர் வாய் வழியாக வித வித உருவெடுத்து வளர்ந்த பிறகு தான் அவள் காதை எட்டியது. முதல் மனேவி இறந்த பிறகு, உலகத்தையே வெறுத்தவர் போல் கிளம்பிய ஞான சம்பந்தர் ஒரு நாடகக்காரி மீது மையல் கொண்டார். அவரது மோகமும் பணமும் செல்வாக்கும் அவள் நாடகத் தொழிலேத் தியாகம் செய்து விட்டு அவரை ஏற்றுக்கொள் ளும்படி செய்தன. திடீரென்று இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டது. காரணம், அவளுக்கு சுதந்திர உணர்ச்சி அதிகமிருந்ததுதானே, அல்லது அவருக்குச் சந்தேக மனப் பண்பு நிறைய இருந்தது தானு என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இடைக்காலத்தில் இருவரும் பிரிந்து விட்டனர். s - அப்போதுதான் ஞானசம்பந்தருக்கு மறுபடியும் கல் யாண ஆசை எழுந்தது. சகுந்தலே மனேவியாளுள். ஒரு வருஷம் நல்ல முறையில் வாழ்ந்தவருக்கு மீண்டும், பழைய காதலி செல்வநாயகியின் கந்திப்பு கிட்டியது. உறவு வளர்ந்தது. புது மனேவியிடம் ம்ோகம் குறைந்து ஒருவித வெறுப்பு வளர்ந்து வந்த பருவம். யுவ்தியான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/152&oldid=814743" இலிருந்து மீள்விக்கப்பட்டது