பக்கம்:சகுந்தலா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£54 சகுந்தலா மாட்டேன்னு சொன்னேன். நீங்க தானே, உனக்குத் தனி வீடு பார்த்திருக்கிறேன் ; நீ வெளியூரிலே யிருந்தால் அடிக்கடி வந்து போகத் தோதுப் படலே செலவும் சிரமமும் தான் ஜாஸ்தியாகுது இன்னு சொன்னிக. இப்ப ஏன் இந்த விட்டுக்குக் கூட்டி வந்தீங்க? நேரே அந்த வீட்டிலேயே கொண்டு விடும்படி வண்டிக்காரன் கிட்டேச் சொல்லியிருக்க லாமே. எனக்கு மானம், மரியாதை கிடையாதா ? முகம் கொடுத்துப் பேச விரும்பாத மூதேவிக இருக்கிற இடத் திலே எனக்கு என்ன வேலே ? கல் மழை பிடித்து விளாசுவது போல் சட பட வெனறு: பொளிக் து தள்ளினுள் அவள். அவரோ பொறுமை இழக்க விரும்பாதவராய் இக் தா! இந்தா பாரு! ஏ செல்லம் ஏய்!” என்று கொஞ்சுதலாகவும் கெஞ்சலாகவும் அவள் கவனத் தைத் திருப்ப முயன்ருர். பலிக்கவில்லே. சும்மா யிருப்பாளா சிற்றம் கொண்ட சகுந்தலே ? . சீ சின்னச் சவமே ! யாரைப் பார்த்து மூதேவியிங்கிறே : யாருக்கு மரியாதை தெரியலே இங்கே ? நாயைக் குளிப் பாட்டி நடுவிட்டிலே கொண்டு வந்து வச்சாலும், அது சாதிப் புத்தியைத் தானே காட்டும்னு சுலவொடை சொல்லுவோ. அது சரியாத் தானிருக்கு. இங்கே வ்ந்து நின்னுகிட்டு ஏன் காள் காளுன்னு கத்துறே? என்று கூப்பாடு போட்டபடி வெளியே வந்தாள், கண்ணகி அவதாரம் போல. ஞ ன ச ம் பங் த ரி ன் ஆத்திரம் அடக்க முடியாதது ஆயிற்று. யாருக்கு மரியாதை தெரியலே ? யாருடி குலேக் கிரு ? என்று கூவி, சகுந்தலேயின் தலைமயிரைப் பற்றிக் கொண்டு அவள் மண்டையைச் சுவரில் நங்கு நங்கென்று' மோதினுர்,

  • ஐயோ என்னேக் கொல்லுதானே! ஏ படுபாவி, நீ விளங்குவியா! அந்தச் சிறுக்கி மேலே உனக்கு மோகமின்ன என்னை ஏன் கொலே பண்ணுறே! ஐயோ அம்மா ! என்று கூப்பாடு போட்டாள் சகுந்தலே, எட்டு விட்டுக்குக் கேட்கும் படி கதறி, தெருவைப் பூராக் கூடும்படி செய்ய வேனும் என்ற நோக்கத்தோடு கத்துவது போல் அலறினுள் அவள். அவளுக்கு அப்போது வெறி தான் அதிகமிருந்தது. புருஷன் மீது வெறுப்பும் ஆங்காரமும், மற்றவள் ப்ேரில் ஆத்திரமும் பொருமையும் ஏற்பட்டிருந்தன. உணர்ச்சிக் கொதிப்பு அவள அறிவை மழுங்கடித்து விட்டது. . .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/156&oldid=814747" இலிருந்து மீள்விக்கப்பட்டது