பக்கம்:சகுந்தலா.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ 6 O சகுங்தலா குழ்கிலே நிகழ்ச்சிகளால் தம்மை மறந்து நின்ற இரு வரையும் திடுக்கிட வைத்தது அருகில் வெடித்த ஆவேசக் குரல். ஞானசம்பந்தரின் கூப்பாடு அது. பேஷ் : எத்தனே காலமாக இந்த நாடகம்! பத்தினி வேஷம் போட்டயேடி தட்டுவாணிச் சிறுக்கி : என்று கூச்சலிட்டுப் பாய்ந்தார் அவர். அவர் அப்பொழுது அங்கு வருவார் என யாரும் நினைக் கவில்லே. காமக்கிழத்தி செல்வநாயகியின் பின்னுல் ஒடிய அவரது முயற்சியும் கெஞ்சுதல்களும் பலனளிக்க வில்லேஅவன் திரும்பவும் அத்த விட்டில் காலடி எடுத்து வைக்க. மறுத்துவிட்டாள். எவ்வளவோ தாஜ சப் படுத்தியும், அவள் மனதைமாற்ற இயலாது போகவே, ஹோட்டலில் டி.பன் வாங்கிக் கொடுத்து அவளே ரயிலேற்றி விட்டு வெறி வேகத்தோடு வீடு திரும்பினுர் அவர். 'அந்த ராங்கிக்காரி இருக்கிற வரை அந்த ஊரையே மிதிக்கப் போவதில்லே’ என்று ஆசைநாயகி இறுதியாகவும் உறுதியாகவும் கூறியது அவர் மூளேயைக் குழப்பியது. வந்தவளே அவ: மானப்படுத்தி அடங்காப்பிடாரித்தனம் பண்ணிய முதே வியை என்ன செய்தாலும் ஆத்திரம் தணியாது போல் தோன்றியது அவருக்கு. அவள் சினுங்கலோ சிறு முனங் கலோ காட்டினுலும் கூட அவளே உதைத்துப் புடைத்துத் துவைத்து-செத்த்ாலும் சரியென்று-ப்ைஸல் பண்ணி விட வேண்டியது தான் என்ற வெறியோடு திம்பினர் அவா. - வெளி வாசல் கதவு தாளிடப் படாமலே கிடந்தது. தள்ளிக்கொண்டு உட்புகுந்தவரை வரவேற்றது வெறிச் சோடிய விடு தான். ரத்தப் பசியோடு திரியும் காட்டேறி மாதிரி அவர் அறை அறையாகப் பார்த்து விட்டு மாடிக்கு வந்தபோது தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது. இடிந்து விழும் கட்டிடப் பகுதியை விட, ரகுராமனும் சகுந் தலையும் சேர்ந்து கின்ற கோலம் தான் அவர் கண்களே உறுத்தியது. அவன் அவளைப் பிடித்திருந்தான் : அவளோ விலகாமல் அவன் உடலோடு ஒட்டி நின்ருள். சந்தேகப் பிராணியின் வெறிகொன்ட உள்ளத் தீயிலே படிந்த பெட் சோலாயிற்று அந்தக் காட்சி. ‘. . - கத்திக்கொண்டு அவளைத்தாக்க ஓடி வந்தார். அவள் பயந்து விலகி நின்ருள். தான் செய்து விட்ட தவறின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/162&oldid=814754" இலிருந்து மீள்விக்கப்பட்டது