பக்கம்:சகுந்தலா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சகுந்தலா ஒடுங்கிக் கிடந்து விட்டு நானும் இன்று தான இங்கு வர வேண்டும் என்று வருந்தினுன் அவன் - அடுத்த விட்டுக் கதவு அடைபட்டு விட்டது. த சன் அப்பொழுதே விட்டினுள் திரும்பி விட்டால், ஒரு வேனே அவள் வந்து பாக்கிச் செடிகளேயும் நட்டு வைக்கச் செளகரியமாக யிருக்கும் என்று நினைத்தான் ரகுராமன். ஆகவே காற்காலியையும் புத்தகத்தையும் தூக்கிக்கொண்டு திரும்பினுன். மெத்தப் படித்த அவனுக்கு முகமது பின் துக்ளக் கதைதான் அக்தச் சமயத்தில் எண்ணப் பரப் பிலே ந்ேதியது. என் மனதையே என்னுல் சரியாக நிர்ண அபிக்க முடியவில்லே. எனது எண்ணங்களேத் திட்டமான போக்கிலே திருப்பி, நல்ல முறையிலே செயல் புரிய முடிய வில்லே! எனது காரியமெல்லாம் அசட்டுத் தனமாக-முட் டாள் தனமாகத்தான் தோன்றும் மற்றவர்களுக்கு ' என்று மூனங்கினுன் அவன். - பின்கதவைப் பலமான ஒசையுடன் சாத்தி, படார்’ என்று தாழ்ப்பா8ளத் தள்ளினுன். அவ்விதம் வீடே அதிரும் :படியாக அவன் கதவை அடைத்ததன் காரணமே, தான் உள்ளே திரும்பிப் போய் விட்டதை அடுத்த வீட்டுக்காரி உணர்க்து கொள்ள வேண்டும் என்பதுதான். என்ன சகுந்தலா, செடி பூராவையும் நட்டுத் தண்ணி ஊத்தியாச்சா ? என்று பக்கத்து வீட்டின் ஆழத்தி லிருந்து எழுந்த குரல் சுவரையும் தாண்டி ஒலித்து அவன் காதில் விழுக்தது. ஒ அவள் பெயர் சகுந்தலாவா! அழகிக்கு ஏற்ற அழ கான பெயர்தான் என்று ரகுராமனின் மனம் பாராட்டு டு ைவழங்கியது. அவள் என்ன பதில் சொன்னுள் என்பது தெரிய வழியில்லாமல் போயிற்று. அவள் ரொம்ப மெது வாகத்தான் பேசுவாள் போலிருக்கு என்று நினைத்தான் அவன். - - ரகுராமனின் உள்ளத்திலே சிற்றலே தெறித்த உணர்வு களெல்லாம் தேய்ந்தும் ஒடுங்கியும் மாறியும், ரசனே உணர்ச் சிக்கு இடமளித்து விட்டன. அவன் நினைவுப் பரப்பிலே சற்று முன்பு கண்ட அவளது தோற்றங்கள்-அவள் பார்த்த பார்வையும், காட்டிய பாவங்களும், நடந்த தினுசும் -கிழலாடின. உடலுடன் ஒட்டிக் கிடக்கும்படி, வெளிர் கீல நிறப் பூந்துகில் அணிந்திருந்தாள் அவள். அவள் உட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/18&oldid=814767" இலிருந்து மீள்விக்கப்பட்டது