பக்கம்:சகுந்தலா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுக்தலா 五r லுக்கு அது எடுப்பாகத்தானிருந்தது. அவள் பார்வையும், விதவிதப் பார்வைகளே மிதக்க விடும் அழகிய விழிகளும், முகமும், நடையும் வசீகர சக்தி நிறைந்துதான் திகழ்ந்தன. அவற்றுக்காக வெல்லாம் அவளேப் பாராட்டலாம். ஆனல் அவள் என்னேக் கண்டு பயங்து ஒடிப்போனது தான் எனக்குப் பிடிக்கவில்லே. கதவை அடைத்துக் கொண்டு வீட் டினுள் முடங்கிக் கிடப்பதும் பிடிக்கவில்லை தான். இவள் ஏன் இப்படி வசிக்கவேண்டும்?' என்று கேட்டான் ரகுராமன். உரிய பதிலே யார் அவனுக்குச் சொல்லப் போகிரு.ர்கள் ! இத்தனே நாட்களுக்குப் பிறகாவது ஒரு விஷயம் தெளி வாயிற்றே ! அந்த வீட்டிலே மூன்று பெண்கள் இருக்கிருர் கள். அவள், அவள் பெயர் சகுந்தலாவாமே! அந்த வேல்ேக் காரப் பெண். உள்ளேயிருந்து கத்தினளே ஒருத்தி-அவள் எல்லோருக்கும் பெரியவள் போலும் ! என்ற திருப்தி பிறந்தது அவனுக்கு. எனினும் அவர்களேப் பற்றி இன்னும் எவ்வளவோ அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே எனும் ஏக்கமும் வளர்ந்தது. சாயங்காலம், ரகுராமன் மறுபடியும் தோட்டத்திற்குப் போய் கவனித்தான். அடுத்த விட்டின் பக்கத்தில் அந்தச் செடிகள் தரையிலேயே கிடந்தன, பசியால் மெலிந்து தளர்ந்து சாகக் கிடக்கும் சின்னஞ்சிறு ஜீவன்களேப் போல, அவன் பார்வை கதவின் பக்கம் பாப்ந்தது. எப்பொழுதும் போல் அடைத்த கதவு தான் காட்சி தந்தது. அவன் கினேத்தான்- இப்பவே செத்தது போலாகி விட்டன் அந்தச் செடிகள். இனிமேல் அவள் எப்ப வந்து நடு வாளோ ! நட்டாலும் பயனில்லாமல் போகலாம். இளஞ் செடிகளே. வீணுகச் சாக விடுவானேன் ? நானே கட்டு விட்டா லென்ன ?” i அவனுக்கு எவ்வித ஆட்சேபனையு மில்லே. ஆகையில்ை சிரத்தை எடுத்து பாக்கிச் செடிகளையும் நட்டு, கிணற்றி லிருந்து தண்ணர் இறைத்து ஊற்றின்ை ஆந்தப் பரோப காரி. அக் காரியத்தை முடித்துக் கையலம்பிவிட்டு, கை க்ளேத் துண்டிலே துடைத்தபடி கின்ற ரகுராமனின் கண்கள் அடுத்த விட்டுக் கதவுப் பக்கம் புரண்டு, அதை அடுத்த ஜன்னலின் புறமாக ஓடின. - அந்த ஜன்னலின் கீழிரண்டு கதவுகள் மூடப் பெற்றிருங் தன. திறந்து கிடந்த மேல் பகுதியின் ஒரு ஒாத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/19&oldid=814768" இலிருந்து மீள்விக்கப்பட்டது