பக்கம்:சகுந்தலா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 41 தது! அவள் எங்கு செல்கிருள், என்ன செய்கிருள் என்று கவனிக்கலாமா எனும் ஆசைகூட ஏற்பட்டது அவனுக்கு. உடனேயே கண்டனமும் பிறந்தது. சே, அது நன்ருக யிராது. அப்புறம் அவள் என்னேப் பற்றி என்ன எண்ணு வாள்!" என்று கினைத்து, தன் வழியே திரும்பினுன் அவன். மறுபடியும் நடக்கத் தொடங்கியதும் அவன் அவள் பக் கம் திரும்பிப் பார்த்தான். அதே சமயம் அவனும் திரும்பி அவன் பக்கம் கவனித்ததைக் கண்டான். பிறகுகின்று பாரா மலே வேகமாக நடந்தான் அவன். கண்ணுேட்டத்திற்குத்தடை விதித்த விட்டது போல் அவன் மனப் போக்கிற்கு முற்றுப் புள்ளி போட்டுவிட முடியவில்லே. அப்பொழுதும், அதற்குப் பிறகும் கூட அவன் மனநிழல் அவள் நினே வைச் சுற்றிப் படர்ந்து கொண்டிருந்தது. அடுத்த விட்டுக்காரியை நேருக்கு நேர் கண்டு அவள் முழு எழிலேயும் ரசிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறி விட்டது. அவள் அழகு நிலா தான். அதைப் பற்றிச் சந்தே கம் கிடையாது. சரி, அவள் யார்? இன்று இவ்விதம் பட்டுப் பூச்சி போல் திரிபவள் பெரும்பாலும் விட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பானேன்? அவள் அப்படித் தான் வாழ வேண்டும் என்று யாராவது கட்டாயப் படுத்தி வைத்திருக் கலாம். அந்த அதிகாரம் பெற்றவர் யார்? அவள் விட்டில் ஒரு நாள் சந்திக்க முடிந்ததே, அந்தப் பெரியவர் தானே? அவர் யார்? அவள் கணவனு; அல்லது, வேறு ஏதாவ்து உறவும் உரிமையும் கொண்டாடுகிறவரா? அந்தப் பெரி யம்மா யார்? இப்பொழுது சகுந் தலே கூடச் செல்கிற இளை ஞன் யார் - எத்தனேயோ கேள்விகள்! முடிவில்லாமல், முடிவு தெரியாமல், நீளும் எத்தனையோ புதிர்கள்! 'இந்த வாலிபன் ஒருவேளை அவளது ஆசைக்கு உரியவ கை. .' என்று இழுத்தது மனம். சேச்சே, அப்படி யெல்லா மிராது. எதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமலே, அவளேப்பற்றி அநாவசியமாய் பேசக்கூடாது. அவன் அவள் மகனுக இருக்கலாம்' என்று எதிரொலி பிறந்தது. மகளு! அவனு! அவளுக்கா!' 'ஏன்? அவளுக்கு வயசு அதிக மிருக்காது என்று கினேக் கிருயா? . . . 'மிஞ்சிப்போனுல் அவளுக்கு இருபத்தாறு இருபத்தேழு வயதுதானிருக்கும். அவனுக்கு பதினெட்டு வயதிருக்கலாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/43&oldid=814795" இலிருந்து மீள்விக்கப்பட்டது