பக்கம்:சகுந்தலா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுக்தலா ،3 ގޯ தாகிவிடுமா ? இப்ப உன்னே அடிக்கிறேன். அடித்த பிறகு நான் உன்னே அடிக்கலே, அல்லது, அடிச்சதை மறந்துவிடு யின்னு அதிலே ஏதாவது அர்த்தமுண்டா? நீ அடிபட்டது பட்டது தானே! எதிலேயுமே அப்படித்தான். ஆமா என்ற முரட்டுக் குரல் அழுத்தமாக வந்து பாய்ந்தது காதிலே. இப்படிப் போதிப்பவர் யார் என்று புரிந்து கொள்ள ரகுராமன் சிரமம் எடுக்க வேண்டிய அவசியமே யில்லே. அவர் தான். அந்த வீட்டுப் பெரியவர் ஞானசம்பந்தம் தான். அவர் ஏன் அவளே அடிக்க வேண்டும்? 'வாயை மூடு. கத்தாதே கழுதை அழுது அட்டுழியம் பண்ணினியோ, உன் கழுத்தை நெரிச்சுக் கொன்னு போடு வேன். ஆமா!' என்று கர்ஜித்தார் அவர். அவள் மெதுவாக ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அவரது கோபம் அதிகரிக்கும்படி அவள் என்ன சொன்னுள் என்று தெரியவில்லை. அவர் ஆங்காரத்தோடு உதைத்தார். வாயில் வந்தபடி ஏசிக்கொண்டே அறை அறையென்று அறைந்தார். அவள் விம்மி விம்மி அழுதது ரகுராமனுக்கு அளவற்ற வேதனே உண்டாக்கியது. "ஐயோ பாவம். இப்படியா காட்டு மாட்டுத் தனமாக கடந்து கொள்வது? அவன் தாலி கட்டிய புருஷனுகத் தானி ருக்கட்டுமே. அதற்காக ஒரு பெண்ணே இப்படியா உதைப் பது? இது மிருகத்தனம். மிராண்டித்தனம். தனிமையில் இவ்விதம் நடந்து கொள்வது. அப்புறம் சபை மெய்க்கப் பேசுவது! தான் தான் ரொம்ப ரொக்கம், மத்தவங்களெல் லாம் செல்லாக் காசுகள் என்ற தெம்பிலே பேசுறது. மிரு கத்திலும் கேடு கெட்ட மிருகம் இவன்' என்று மனதாற ஏசிக் கொண்டிருந்தான் ரகு, சுவருக்கு அந்தப் பக்கத்திலே அவர் லெக்சரடித்துக் கொண்டிருந்தார் : உனக்கு என்ன திருவிழா வாழுது? நான் வீட்டிலே இல்லாத நாள் பார்த்து வெளியே போற துன்னு: சொன்னுல், உனக்கு எவ்வளவு திமிருன்னு கேட்கிறேன். சரி, போனது தான் போனியே! போனுேம், சாமி கும்பிட் டோம், வங்தோம்னு திரும்பினியா? பதினுேரு மணி வரைக் கும் உனக்கு அங்கே என்ன வேலை? நீ பக்தியோடு சாமி கும்பிடப் போயிருந்தால் தானே? அங்கே யாரு வாரு, எவன் எப்படி யிருக்கிருன்னு பார்த்து மகிழப் போயிருப்பே. இல்லேன்ன இப்படி சீவிச் சிங்கள் ரிச்சு நீட்டி மினுக்கி நெளிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/45&oldid=814797" இலிருந்து மீள்விக்கப்பட்டது