பக்கம்:சகுந்தலா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுங்தலா 47 激 அவனுக்குப் புத்தி சொல்லக் கிளம்பிவிடுவாள். குனிந்து பெருக்கிக் கொண்டிருப்பவள் பாதியிலேயே அதை விட்டு விட்டு வாரியலேக் கையில் பிடித்தபடி வேகமாக கிமிர்ந்து, "ஏன் ராசா, உனக்கே இது நல்லா யிருக்குதா?’ என்று கேட்கும் போது வேறு யாராவது பார்த்தால் தவறுதலா கவே கருதுவர். ஆனுல் ரகுராமனுக்கு அவள் பண்பாடு நன்கு தெரியும். அதனுல் பேசாமல் சிரித்தபடி நிற்பான். அல்லது என்ன பாட்டி, என்ன விஷயம்' என்று கேட்டு வைபபான. ஏதாவது வேலை பார்க்காமல் வீண் பொழுது போக்கிக் கொண்டிருந்தால் என்ன பிரயோசனம்: உத்தியோகிம் பார்க்க வேண்டிய காலத்திலே ஊரை ஊரைச் சுத்தி வாறதி ேைல புண்ணியமில்லே’ என்பாள். அல்லது காலாகாலத் திலே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொள்ளாமே, என்ன ராசா நீ எத்தனை நாளேக்குத் தான் ஹோட்டல் சாப்பாட் டைச் சாப்பிட்டுக் கொண்டு இப்படியிருக்கப் போகிறே? என்று அனுதாபம் அறிவிப்பாள். "நான் வேலை செய்யாமலா இருக்கிறேன். பாட்டி: என்று சிரிப்பான் அவன். ன்ைன வேலையைச் செய்கிறே?” "படிக்கிறது, எழுதுகிறது...... 'உண்கிறது, ஊர் சுத்துகிறது, உறங்குவது - இதெல் லாமா!' என்று அவளும் கூடச் சேர்ந்து அடுக்கிவிட்டுக் கெக்கெக் கென்று சிரிப்பாள். அவ்வேளையில் அவள் தோற் றமே அவனுக்குச் சிரிப்பாணிப் பொருளாக விளங்கும். $ “எத்தனே நாளேக்கு ஒட்டல் சோற்றைத் தின்று காலம் கடத்தப் போகிறே?" என்றதும் அவன் சொல்வான்; நம்ம கொம்பங்குளம் மூக்கபிள்ளே சாப்பாடு தயாரிக்கும் கலேயை மறந்து போகிற வரைதான். அவர் கடைச் சாப்பாடும், அவர் வைக்கிற கறிவகைகளும், அடாடா பாட்டி. கான் நிச்சயமாகச் சொல்கிறேன் - கொம்பங்குளத்துப் பிள்ளே தாயாரிக்கிற சாம்பார், ரசம் மோாக்குழம்பு, கூட்டுக்கற, அவியல் வகைகளே மாதிரி இந்தக் காலத்துப் பெண்களுக் குச் சமைக்கவே தெரியாது. நாகரிக யுவதிகளுக்கு ரசம் கூட நன்ருக வைக்கத் தெரியாது. இந்தக் கழுதைகளிலே ஒன்றைக் கட்டிக் கொண்டு கஷ்டப்படுவதைக் காட்டிலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/49&oldid=814801" இலிருந்து மீள்விக்கப்பட்டது