பக்கம்:சகுந்தலா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 63 படத்தில் எழுதியிருப்பதைக் கொண்டுதான் இது குதிரை, இது ரோஜா, இது மயில் என்றெல்லாம் தீர்மா ளிைக்க வேண்டும். இல்லேயெனில் கண்டு பிடிக்கவே முடியாது தான் என்று நினைத்தான் அவன். பேபி படம் ஒன்றைப் பார்த்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதில் சகுந்த லாம்பா அம்மாள் என்று எழுதியிருந்தது அவனது சிரிப்பை அதிகப்படுத்தியது. சகுந்தலா என்பது அழகாக இருக்கிறது. சகுந்தலாம் பாள் நன்ருகயில்லே. அதைவிட மோசமாக இருக்கிறதே இது. சகுந்தலாம்பா அம்மாளாம்! அவளுக்குச் சிறிதேனும் அழகு உணர்ச்சி, ரசனே எதுவுமே கிடையாது என்று நான் நினைத்தது சரிதான் என்று நினேத்தான் அவன். ஊஹகும். அவளாக எழுதியிருக்கமாட்டாள். படம் பின்னத் தொடங்கிய ஆரம்பத்தில், யாராவது பெரிய மனிதர் எழுதிக் கொடுத்தது தான் இந்த லெட்சணத்திலே கயிருக்கும். அம்மாள்,போய், அம்பாளும் போய், சகுந்தலா என்று வெறும் பெயர் மாத்திரம் இருப்பது அவள் நாகரிக வளர்ச்சியைக் காட்டுகிறது என்று கொள்ள வேண்டும். பெண்ணுலக நாகரிகப் பரிணுமத்தின் அடுத்த படியான எம்பிராய்டரி வேலையிலும் அவள் தேர்ந்திருக்கிருள் என்பதற்கு ஜன்னல்களிலும் வாசல் ஒாத்திலும் தொங்கும் திரைகளே சாட்சி என்று எண்ணியது மனம், இந்த ரக எண்ணச் சுழிப்பினுல் அவன் சிரிப்பு ஒடுங்கவில்லே. என்னய்யா சிரிப்பு தானகவே சிரிக்கும்படி அப்படி என்ன ஹாஸ்யத்தைக் கண்டு விட்டீர்?’ என்று கனத்துக் கொண்டே வந்தார் ஞானசம்பந்தம். இல்லே, ஒண்னு மில்லே ' என்ருன் அவன். ஒன்றுமில்லேன்ன சிரிப்பு எப்படி வந்தது? அது தான் பொரும்பாலரிடமுள்ள் தவறு. மனசிலே நினைக்கிறதைச் சரியாகச் சொல்லத் தெரிவதில்லை. சொல்லத் துணிவு இருப்பது மில்லை. இது மாதிரி விஷயங்களேப் பற்றி யெல்லாம் தான் நான் எனது புதிய புத்தகத்திலே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அவர் மேஜை முன் அமர்ந்தார். ஒகோ, நீங்க புஸ்தகம் கூட எழுதுகிறேளா, எனக்குத் தெரியாதே ! இதற்கு முன்னலே எத்தனே புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள் ? என்று ஆவலாக விசாரித்தான் ரகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/65&oldid=814819" இலிருந்து மீள்விக்கப்பட்டது