பக்கம்:சகுந்தலா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 65 "நீர் என்ன சொல்ல நினைத்தீர் என்பது எனக்கென்ன தெரியும் : இப்படித்தான் எல்லோரும். என்ன பேசு கிருேம் என்பதைப் பற்றிய யோசனேயே யில்லாமல் வார்த் தைகளைக் கொட்டி விடுகிறது என்று அவர் பாஷையி லேயே அவருக்குத் திருப்பிக் கொடுக்கல்ாம் என்று தோன் றியது. எனினும் ரகுராமன் பேசவில்லை. "ஒ யெஸ். நீங்க அன்னேக்கு ரொம்பக் கோபமாகப் போய்விட்டீர்களே! அதற்கப்புறம் உங்களேச் சந்தித்துப் பேசனும்னு நினைத்தேன், பார்க்கவே முடியலே!’ 'நீங்க வெளியூர் போய்விட்டீர்கள் போலிருக்கு' "ஆமா, அடிக்கடி போக வேண்டியிருக்கும். கொஞ்சம் முச்கிய அலுவல்கள் முடிய வேண்டியிருக்கு. அதனுலேதான் அலேச்சல்.’ ‘சரிதான்' என்று தலேயசைத்தான் அவன். 'நேற்ருே முந்தா நாளோ-நேற்றைக்குத்தான். ஆமாம். நேற்றேதான்-உங்களைப் பற்றி யாரோ பிரமாதமாகச் சொன்னுங்க” - "என் சீனப் பற்றியா! என்ன ஆச்சர்யம்' என்றன் 沢空列。 'உங்கள் நண்பர் போலிருக்கு. லேபிரரியில் பார்த்தேன். விடு, வசதி இதையெல்லாம் பற்றிப் பேச்சு வந்தபோது, உங்களேப் பற்றிக் குறிப்பிட நேர்ந்தது. அப்பதான் சொன் ஞர். ரொம்ப நல்லவர், படித்தவர். அப்படி இப்படியின்னு. எனக்கு வருத்தமாக யிருந்தது. நாம் பழகாமல் இருக் கிருேமே, முதல் தடவை சந்தித்தது கூட அபிப்பிராய பேதத் திலே முடிந்ததேன்னு வருத்தப்பட்டேன். அதை மறந்து விடுங்க. பின்னலே தட்டி கட்டி வேலி போட்டிருப்பதேைல உங்களுக்கு இடைஞ்சல் ஒன்று மில்லேயே - 'ஒன்று மில்லேதான்!” "செளகரியமும் ஒன்று மில்லே என்று கினேக்கிறீர்கள். இல்லேயா? ஹஹ, நீர் அப்படித்தானய்யா கினேப்பீர். அப் படித்தான் நினைக்க முடியும்' என்று கத்தினர் அவர். அவ்வேளையில் வேலேக்காரப் பெண் உலகு இரண்டு டம் :ளர்களில் காப்பி கொண்டு வந்தாள். ஒன்று கண்ணுடி டம் :ளர்; மற்ருென்று வெள்ளி டம்ளர். கண்ணுடி டம்ளரை ஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/67&oldid=814821" இலிருந்து மீள்விக்கப்பட்டது