பக்கம்:சகுந்தலா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா Z5 அதற்கு வழி இல்லாமல் செய்து விட்டாள் சண்டாளி ! என்று நெடுமூச்சுடன் திச் சொல்லும் எறிவது அவன் வழக்க மாகிவிட்டது. அவள் வாழ்க்கையில் படும் வேதனைகளே உணர்ந்து அவளுக்காக அவன் அனுதாபம் அறிவிக்கத் தயார் தான். ஆனால் இந்த விஷயத்தில் அவள் கண்டனத் துக்குரியவளே என்று தான் மனம் பேசும். திடீரென்று அவனுக்கொரு சந்தேகமும் எழுந்தது. ஒரு வேளே இப்படித் தோட்டத்தின் நடுவிலே மறைப்பாகத் தட்டி கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஞானசம்பந்தம் மூளேயில்ே உதயமாகி யிருக்கலாமல்லவா! பிறர் மீதும் தன் மனேவி பேரிலும் நம்பிக்கை கொள்ள முடியாத அந்த மனுஷனே பாதுகாப்பாக...... இந்த கினேப்பு பிறக்கவும் அவனுக்கு அடுத்த வீட்டு ஐயா மேல் அசாத்தியக் கோபம் உண்டர் யிற் று. புத்தகம் எழுதுகிருராம் புத்தகம்! அவரும் அவர் ஆராய்ச்சிகளும் அவர் மோறை மாதிரித்தானிருக்கு ! சமாதி கட்டும் வழக்கம் எந்த கலாசாரத்திலே முளைவிட்டது? எகிப்திய விவிலிலேஷனு ? திராவிடக் கலாச்சாரமோ ? அதா, இதா ! இந்தப் பிரச்னையை முடிவு கட்டவில்லே யென்ருல் மனிதன் உயிர் வாழ முடியாது பாரும்! இவரை யும் இவர் எழுத்துக்களேயும் குழி தோண்டிப் புதைத்து மேலே சமாதி எழுப்பினுல் எனக்கு சந்தோஷமாக யிருக் கும். ஆகவே அது புண்ணியமான காரியம் ! என்று கின்ேத் தான் அவன். - அவனது வெறிப் பண்பு அவனுக்கே சிரிப்பு தந்தது. * அவர் பகுதியில் அவர் வீட்டுச் செளகரியத்திற்காக அவர் என்ன எழவையும் செய்துவிட்டுப் போகிருர். அதனுல் உனக்கு என்ன நஷ்டமாம் ? என்ற உள்ளொலி பிறவா மலில்லே, அவளேப் பார்க்க முடியவில்லையே. அதல்ை தான் என்று சினுங்கியது உள்ளம். ரகுராமா, நீ கெட்டுப்போய்ை விளுகக் கெட்டுப் போய்ை ! ஆகவே நாசமாய்ப் போ!' என்று நாடக தோர&ணயிலே தனிமொழி பேசிச் சிரித்தான் அந்த ரசிக சிகாமணி. பூlமான் ஞானசம்பந்தம் வாசித்துப் பார்க்கும்படி கொடுத்தவற்றை ரகுராமன் பொறுமையோடு படித்துத் தீர்த்து விட்டான். 'சுரத்தில்லே, எல்லாம் குப்பை என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/77&oldid=814832" இலிருந்து மீள்விக்கப்பட்டது